தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annapurani Video : என்னை அழிக்க நினைப்பவர்களுக்கு- அன்னபூரணி வெளியிட்ட வீடியோ!

Annapurani Video : என்னை அழிக்க நினைப்பவர்களுக்கு- அன்னபூரணி வெளியிட்ட வீடியோ!

Divya Sekar HT Tamil

Mar 24, 2023, 02:15 PM IST

google News
நீங்க என்னை அழிக்க பாத்தீங்க ஆன இப்ப நான் பல மடங்கு சக்தியாக உருவெடுத்து இருக்கேன் என அன்னபூரணி தெரிவித்துள்ளார்.
நீங்க என்னை அழிக்க பாத்தீங்க ஆன இப்ப நான் பல மடங்கு சக்தியாக உருவெடுத்து இருக்கேன் என அன்னபூரணி தெரிவித்துள்ளார்.

நீங்க என்னை அழிக்க பாத்தீங்க ஆன இப்ப நான் பல மடங்கு சக்தியாக உருவெடுத்து இருக்கேன் என அன்னபூரணி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னபூரணி அம்மாள் என்ற பெண் சாமியார் பரபரப்பாக பேசப்பட்டார். ஆன்மீக சொற்பொழிவு மூலமாக சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணி அம்மாளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இந்த நிலையில் அன்னபூரணி அம்மாள் திருவண்ணாமலையில் புதிய ஆசிரமம் அமைத்து அவரை தேடி செல்லும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தை உணர வைத்து வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே ராஜாதோப்பு நெடுஞ்சாலையை தாண்டி ஊரை கடந்து சென்றால் தாமரைக்குளத்தின் எதிரே தென்னை ஓலைகளால் ஆசிரம குடில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குடிலில் உள்ள ஆஸ்தான இருக்கையில் இருந்தபடி அவர் ஆன்மீகம் போதிக்கிறார். தற்போது அன்னபூரணி அம்மாள் 'டிஜிட்டல்' முறையிலும் ஆன்மீக தீட்சை அளிக்கிறார். இதற்காக ஒரு போன் அழைப்புக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்னபூரணி வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அதில், ”என்னை தவறாக சித்தரித்து என்னையும் ஆன்மீகத்தையும் அழிக்க பார்த்த குரு துரோகிகளுக்கு தான் இந்த பதிவு. முதலில் நூற்றுக்கனக்கான குடும்பங்கள் தான் பயன் அடைந்து வந்தார்கள்.

ஆனால் இப்போது ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன் பெற்று வருகிறார்கள்.இந்த ஆயிரம் லட்சம் ஆகும் லட்சம் கோடியாகும். இதை பார்த்து நீங்க பொறமை படுவதை தவிற வேற எதுவும் செய்ய முடியாது. இத நான் கையில் எடுக்கவில்லை. அண்ட சராசரத்தை இயக்க கூடிய அந்த சக்தி கையில் எடுத்து இருக்கு.

நீங்க என்னை அழிக்க பாத்தீங்க ஆன இப்ப நான் பல மடங்கு சக்தியாக உருவெடுத்து இருக்கேன். சமூக வலைதளங்களில் மக்களுக்கு உண்மையான விஷங்களை கொண்டு போய் சேர்ப்பதில்லை. அதற்கு மாறாக அவதூறு பரப்பி பொய்யான தகவலை தான் பரப்புகிறார்கள்.

இப்பகூட என்கிட்ட தரிசனம் பெற பல ஆயிரம் பணம் கொடுக்கனும். லட்சம் கொடுக்கனும் என பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.ஆனால் என்னிடம் தரிசனம் இலவசம் தான். இவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லியிருச்சி. இன்னமும் காலம் பதில் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி