தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ’எங்கே சென்றாலும் பின்னாடி வருவோம்’ கரூர் கலெக்டர், எஸ்.பிக்கு அண்ணாமலை எச்சரிக்கை

Annamalai: ’எங்கே சென்றாலும் பின்னாடி வருவோம்’ கரூர் கலெக்டர், எஸ்.பிக்கு அண்ணாமலை எச்சரிக்கை

Kathiravan V HT Tamil

Jul 01, 2023, 08:16 PM IST

google News
”ஒரு செந்தில் பாலாஜி உள்ளே சென்று இருந்தாலும் கூட கைத்தடிகளாக பல செந்தில் பாலாஜிகள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்”
”ஒரு செந்தில் பாலாஜி உள்ளே சென்று இருந்தாலும் கூட கைத்தடிகளாக பல செந்தில் பாலாஜிகள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்”

”ஒரு செந்தில் பாலாஜி உள்ளே சென்று இருந்தாலும் கூட கைத்தடிகளாக பல செந்தில் பாலாஜிகள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்”

கரூர் பாஜக சார்பில் நடந்த ‘மாற்றத்திற்கான மாநாடு’ நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது:-

ஆன்மீகத்தில் பெயர்போன கரூர் அரசியல்வாதிகளின் கெட்ட செயலால் தலைகுணிவை கரூருக்கு ஏற்படுத்தி உள்ளது. இழந்த பெருமையை கரூர் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். அதனால்தான் இந்த மாற்றத்திற்கான மாநாட்டை பாஜக நடத்துகிறது. இந்த மாநாட்டை நடத்த பல தடைகள். ஒரு செந்தில் பாலாஜி உள்ளே சென்று இருந்தாலும் கூட கைத்தடிகளாக பல செந்தில் பாலாஜிகள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

பாஜக இந்த இடத்தில் பாஜக நடத்த கேட்டபோது ஒருமாத காலத்திற்கு திமுக புக் பண்ணி வச்சி இருக்காங்க கொடுக்க மாட்டோம் என்றார்கள். அதன் பின் மதுரை உயர்நீதிமன்றம் சென்று இங்கே மாநாடு நடத்த வந்த போது மறுபடியும் திமுகவினர் போலி ரசிது தயார் செய்து நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கி உள்ளோம் என்றார்கள். அப்படி என்ன திமுகவினருக்கு கரூர் பாஜகவை பார்த்து பயம்? செந்தில் பாலாஜிக்கு பாஜகவை பார்த்து பயம் உள்ளதை ஒத்துக் கொள்கிறோம் ஆனால் கரூரில் உள்ள திமுக தொண்டர்களுக்கு பாஜகவை பார்த்து என்ன பயம்.

கரூர் மாநகரத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய கரூர் ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் திமுகவுக்கு மாவட்ட செயலாளர் இல்லை என்ற குறையை பூர்த்தி செய்கிறார்கள். செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் மாவட்ட செயலாளர் பதவிக்கு கரூர் ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் போட்டியிடுகிறார்கள்.

உங்கள் பெயரை குறித்து வைத்துக் கொள்வோம். எங்கே சென்றாலும் கண்காணிப்போம். எங்கே சென்றாலும் பின்னாடி வருவோம். எங்கள் பேச்சை பார்த்து திருந்திக் கொள்ளுங்கள், ஒரு அமைச்சருக்கு பின்னாடி கூஜா தூக்கும் வேலையை நிறுத்திவிட்டு ஏழை மக்கள் வீட்டுக்கு சென்று வேலை செய்யுங்கள்.

உலகத்தில் உள்ள எல்லா மக்களும் போற்றக்கூடிய உத்தமத் தலைவராக நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். உலகின் நெம்பர் ஒன் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள உலகில் நெம்பர் ஒன் தொழிலபதிபர் எலன் மஸ்க் ‘நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்’ என்று சொல்கிறார்.

இந்த உலகிற்கு ஆன்லைன் பரிவர்தனையை கற்றுக்கொடுப்பர் பாரத பிரதமர் நரேந்திரமோடி என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறுகிறார். இஸ்லாமிய நாடான எகிப்தின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு தரப்பட்டுள்ளது என அண்ணாமலை பேசினார். 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி