தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ’ஜெயலலிதாவை பற்றி அண்ணமலை சொன்னது உண்மைதான்’ பண்ரூட்டி ராமச்சந்திரன் பேட்டி!

Annamalai: ’ஜெயலலிதாவை பற்றி அண்ணமலை சொன்னது உண்மைதான்’ பண்ரூட்டி ராமச்சந்திரன் பேட்டி!

Kathiravan V HT Tamil

Sep 28, 2023, 08:41 PM IST

google News
”உண்மைகள் அப்படியே நிற்கும். அதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை”
”உண்மைகள் அப்படியே நிற்கும். அதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை”

”உண்மைகள் அப்படியே நிற்கும். அதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை”

அதிமுக-பாஜக கூட்டணி பிளவுபட்டுள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முன்னாள் அமைச்சர் பண்ரூட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

கேள்வி:- ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்னாமலை கூறி உள்ளாரே?

அது உண்மை, அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டது என்பது உண்மை. அது நமக்கு பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா என்பது வேறு, கடவுளையே குறைசொல்லக்கூடிய நாடு இது.

ஹரியானாவிலே ஓம்பிரகாஷ் சௌதாலா, பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரெல்லாம் சிறைக்கு சென்றார்கள். இதெல்லாம் உண்மை. இவை குற்றச்சாட்டு அல்ல.

உண்மைகள் அப்படியே நிற்கும். அதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கேள்வி:- எடப்பாடி தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்கிறார்களே?

அவரோடு யார் வந்தால் எங்களுக்கு என்ன?

கேள்வி:- 2026இல் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அண்ணாமலையின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு கட்சியின் தலைவர் அந்த கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராக வர வேண்டும் என கோரிக்கை வைப்பது நியாயம். அதனை ஏன் உங்களை தாக்குவதாக எடுத்து கொள்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியும் எங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் கூட்டணி பேசும்போது மாற்றங்கள் வரும்.

அடுத்த செய்தி