தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: மேட்ரிமோனி மூலம் திருமணமாகாத இளைஞர்களுக்கு வலை.. லட்சக்கணக்கில் மோசடி செய்த கில்லாடி இளம்பெண்!

Crime: மேட்ரிமோனி மூலம் திருமணமாகாத இளைஞர்களுக்கு வலை.. லட்சக்கணக்கில் மோசடி செய்த கில்லாடி இளம்பெண்!

Karthikeyan S HT Tamil

Jul 09, 2023, 12:32 PM IST

google News
மேட்ரிமோனி இணயதளம் மூலம் திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மேட்ரிமோனி இணயதளம் மூலம் திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மேட்ரிமோனி இணயதளம் மூலம் திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருமணமாகாத ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான இளைஞர் ஒருவர் ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனிடையே தெலுங்கு மேட்ரிமோனி இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவுசெய்தும் அந்த இளைஞர் பெண் தேடியுள்ளார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த ஷ்ரவண சந்தியா என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.

பின்னர் இருவருக்கும் பிடித்துப்போக, இருவரும் மொபைல் எண்களை பரிமாற்றம் செய்து பேசி வந்துள்ளனர். மேலும், தனது புகைப்படங்களையும் சந்தியா, அந்த இளைஞருக்கு அனுப்பி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் மிகவும் பிடித்துப்போக, அந்த இளைஞரும் தொடர்ந்து சந்தியாவுடன் பேசிவந்திருக்கிறார்.

இந்த சூழலில் தனக்கு சில பண பிரச்னைகள் இருப்பதாக சந்தியா கூறியிருக்கிறார். இதை நம்பி சந்தியா கேட்கும்போதெல்லாம் அந்த இளைஞர் அவ்வபோது பணம் அனுப்பி உதவி வந்துள்ளார். இவ்வாறாக பல தவணைகளில் சுமார் 9 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவிதானே என்று நினைத்து சந்தியாவுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் பரிசாக அவரது முகவரிக்கு அனுப்பியுள்ளார். இதனிடையே திருமணம் குறித்து பேச்சு எழும்போதெல்லாம், அதற்கு சந்தியா சரியாக பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார். இதில் சந்தேகமடைந்த இளைஞர் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து அவரது மொபைல் எண்ணை பிளாக் செய்திருக்கிறார் சந்தியா. பின்னரே தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த அந்த இளைஞர், இது குறித்து ஆவடி காவல் ஆணையரகத்துக்கு இணைதளம் மூலமாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீஸார் விசாரணை நடத்தினர். சந்தியாவின் செல்போன் எண் சிக்னலை வைத்து அவர் பெங்களூருவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் பெங்களுருவுக்கு விரைந்த போலீசார், அங்கு மகளிர் விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த சந்தியாவை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேட்ரிமோனியில் விவரங்களை பதிவு செய்து திருமணம் ஆகாக ஆண்களிடம் ஆசைவார்த்தை கூறி பேசி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது. 

மேலும், அந்த இளைஞருக்கு சந்தியா அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படம் ஒரு சினிமா நடிகையின் புகைப்படம் எனவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருமணமாகாத ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி