100 Years of Kalaignar: முத்தான திட்டங்கள் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த கருணாநிதி!
Jun 03, 2023, 06:10 AM IST
கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர், 50 ஆண்டுகள் திமுக தலைவர், இலக்கியவாதி, வசனகர்த்தா என பன்முக ஆளுமை மிக்கவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழக அரசியலில் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர். கலைஞர், தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் என்று அன்புடன் அழைக்கப்படுபடும் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
மறுமண நிதி உதவித்திட்டம்
விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கைம்பெண் மறுமண நிதி உதவித்திட்டம்
சமத்துவபுரங்கள்
அனைத்து மக்களும் ஒரே இடத்தில் சாதி பேதமின்றி வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட குறுநகரத் திட்டம்தான் பெரியார் நினைவுச் சமத்துவபுரம். ஆகஸ்ட் 17, 1998-ல் மதுரை மாவட்டம், மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் தொடங்கப்பட்டது.
உழவர் சந்தை
இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் உழவர்கள் நேரடியாக விளை பொருட்களை விற்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் உழவர் சந்தை. மதுரை அண்ணா நகரில் நவம்பர் 14, 199-ல் முதல் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் படிபடியாக 103 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை பெண்களுக்காக தி.மு.க. ஆட்சியில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
டைடல் பார்க்
நாட்டிலேயே முதன்முறையாக 1997-ல் தகவல் தொழில்நுட்பக் கொள்கை தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவை நிறுவும் வகையில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது 'டைடல் பார்க்'. 2000-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் திறந்துவைக்கப்பட்டது.
அண்ணா பெயரில் நூலகம்
அண்ணா நூற்றாண்டு விழாவில் அவரைப் போற்றும் வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.170 கோடியில் கருணாநிதியால் நிறுவப்பட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம். ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகக் கருதப்படும் சிங்கப்பூர் நூலகத்தை முன்மாதிரியாக கொண்டு கட்டப்பட்டது.
மெட்ரோ ரயில்
சென்னையில் அதிகரித்துவரும் வாகன நெரிசலைச் சமாளிப்பதற்காக 2006-ல் கருணாநிதியால் தொடங்கப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில்.
ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியின்போது கருணாநிதி அமல்படுத்தினார்.
டாபிக்ஸ்