தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udayanidhi: 'அதிமுகவுக்கு இப்போ பிரச்னையே நாற்காலிதான்’ கலாய்க்கும் உதயநிதி!

Udayanidhi: 'அதிமுகவுக்கு இப்போ பிரச்னையே நாற்காலிதான்’ கலாய்க்கும் உதயநிதி!

Kathiravan V HT Tamil

Oct 15, 2023, 08:41 PM IST

google News
”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தைரியமாக மோடியா? லேடியா? என்றார்கள். ஆனால் அந்த அம்மா இறந்த பிறகு இந்த அடிமைகள் மோடிதான் எங்கள் டேடி என்றனர்”
”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தைரியமாக மோடியா? லேடியா? என்றார்கள். ஆனால் அந்த அம்மா இறந்த பிறகு இந்த அடிமைகள் மோடிதான் எங்கள் டேடி என்றனர்”

”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தைரியமாக மோடியா? லேடியா? என்றார்கள். ஆனால் அந்த அம்மா இறந்த பிறகு இந்த அடிமைகள் மோடிதான் எங்கள் டேடி என்றனர்”

சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2020-இல் இந்தியாவை நான் வல்லரசு நாடாக மாற்றிக் காட்டுவேன் என 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி சென்னார். ஆனால் இப்போது 2047-இல் வல்லரசாக மாற்றி காட்டுவேன் என்கிறார். ஒரே ஒரு விஷத்தில் நாம் அவரை பாராட்டி ஆக வேண்டும். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்ற பிரதமர் இந்தியாவின் பெயரை மாற்றுகிறார்.

இதையெல்லாம் இங்குள்ள எதிர்க்கட்சி மக்கள் பிரச்னையை பற்றி பேசி உள்ளார்களா?, அவர்களுக்கு பிரச்னையே நாற்காலிதான். யார் பக்கத்தில் யார் உட்கார வேண்டும், இவர் பக்கத்தில் உட்கார கூடாது என்று சொல்வதுதான் அதிமுகவினரின் பிரச்னை.

கலைஞரின் உடல்நிலையை முன் வைத்து அவர் வந்துசெல்லும் வகையில் இருக்கை வசதி அமைத்து தர கேட்டோம். அதை செய்து கொடுக்காதவர்கள்தான் நாற்காலியை பற்றி பேசி வருகிறார்கள்.

பாஜக அணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது என நாடகமாடி வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தைரியமாக மோடியா? லேடியா? என்றார்கள். ஆனால் அந்த அம்மா இறந்த பிறகு இந்த அடிமைகள் மோடிதான் எங்கள் டேடி என்றனர்.

நீட், ஜிஎஸ்டி, உதய் மின் திட்டம், தேசிய கல்விக்கொள்கை, வேளாண் விரோத சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்தனர். இதையெல்லாம் செய்துவிட்டு தமிழ்நாட்டு உரிமையை காக்க கூட்டணியில் இருந்து முறித்து கொண்டோம் என பொய் சொல்கிறார்கள்.

இப்போது கூட்டணி முறிவு என சொல்வதற்கு 2 நாட்களுக்கு முன் அதிமுக அடிமைகள் டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தனர். அதுவும் நேரடியாக டெல்லி செல்லாமல், கொச்சின், பெங்களூரு வழியாக டெல்லி சென்றனர்.

நாம் ஏமாருவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிமுவும், பாஜகவும் ரெண்டுமே ஒன்றுதான். இவர்கள் தனியாக வந்தாலும் சரி, சேர்ந்து வந்தாலும் சரி வெல்லப்போவது என்னவோ திமுகதான்.

அடுத்த செய்தி