தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Vs Admk: ’மாமியார் உடைத்தால் மண் குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடமா?’ போட்டு உடைத்த ஜெயக்குமார்!

DMK Vs ADMK: ’மாமியார் உடைத்தால் மண் குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடமா?’ போட்டு உடைத்த ஜெயக்குமார்!

Kathiravan V HT Tamil

Nov 19, 2023, 01:24 PM IST

google News
”1994ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்கலாம் என அம்மா அவர்கள் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திரும்ப பெற்றது”
”1994ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்கலாம் என அம்மா அவர்கள் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திரும்ப பெற்றது”

”1994ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்கலாம் என அம்மா அவர்கள் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திரும்ப பெற்றது”

பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரையே வேந்தராக நியமிப்பது தொடர்பான மசோதாவுக்கு ‘மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா’ என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தருமபுரியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்றைய தினம் சட்டப்பேரவையில் எங்கள் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தெள்ளத்தெளிவான கருத்துகளை சொல்லி உள்ளார். ஆளுநர் மசோதாவை மீண்டும் அனுப்பினாலும் கூட உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அவசர அவசரமாக சட்டப்பேரவையை கூட வேண்டிய அவசியம் என்ன?

1994ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்கலாம் என அம்மா அவர்கள் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திரும்ப பெற்றது. பல்கலைக்கழக தனித்தன்மை பாதிக்கப்படும் என சட்டமன்றத்திலேயே அன்றைய அமைச்சர் க.அன்பழகன் பேசி உள்ளார்.

திமுகவை பொறுத்தவர மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போன்ற நிலைப்பாட்டை ஆளுங்கட்சியாக இருக்கும்போது எடுத்து வருகிறது.

ஜால்ரா தட்டும் ஒரு ஆளுநர் இருந்தால் ஆளுநர் நாட்டுக்கு தேவை என திமுகவினர் சொல்வார்கள். சர்க்காரிய கமிஷன் சொன்ன அம்சங்களை நடைமுறைப்படுத்தி இருந்தால் இதுபோன்ற மோதல் போக்குகளே உருவாகி இருக்காது. ஆனால் 17 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக இதை ஏன் செய்யவில்லை.

தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவதுபோல் நடிப்பர்களை எப்போதும் எழுப்ப முடியாது. ஓபிஎஸ் அவர்கள் அரைவேக்காட்டு தனமாக பேசி வருகிறார். மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அம்மாவின் பெயரை குறிப்பிடாமல் மசோதவை நிறைவேற்றி உள்ளனர். அம்மா பெயரை இருட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அரசு இதை செய்துள்ளது.

17 ஆண்டுகாலம் மத்தியில் திமுக மத்தியில் இருந்த போது பூனைக்குட்டிகளை போல் பயந்து குடும்ப நலனுக்காக மாநில உரிமைகளை விற்றவர்கள். மாநில உரிமைகளை மீட்டு எடுத்தது யார் என்பது உலகத்திற்கு தெரியும். எங்களை பொறுத்தவரை தனித்தன்மை உள்ளது. பூனைக்கும் காவல்; பாலுக்கும் தோழன் என்ற நிலைப்பாட்டை எப்போது அதிமுக எடுத்தது கிடையாது என டி.ஜெயக்குமார் பேசினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி