ADMK: ’அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்’ செய்தியாளர் கேள்வியால் கடுப்பான ஜெயக்குமார்
Aug 08, 2023, 03:48 PM IST
”செந்தில் பாலாஜியின் விசாரணை மூலமாக மர்மதேசம் எல்லாம் வெளிவரும். செந்தில் பாலாஜி உண்மைகளை சொல்லும்போது பலபேர் திமுகவில் மாட்டக்கூடிய நிலைமை வரும்”
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு:-
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை ஒருமுறை தன்னை தூங்கவிடமால் செய்வதாக கூறி இருந்தார். இனி அவருக்கு தூக்கம் இல்லாத இரவுகளாகத்தான் இருக்கும்.
நாட்டு மக்களுக்கு உண்மை வெளிவரும் வகையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. பிடிஆர் சொன்ன 30 ஆயிரம் கோடி ஆடியோ உண்மைகள் எல்லாம் வெளிவரும் சூழ்நிலை நிச்சயமாக உருவாகும்.
செந்தில் பாலாஜியின் விசாரணை மூலமாக மர்மதேசம் எல்லாம் வெளிவரும். செந்தில் பாலாஜி உண்மைகளை சொல்லும்போது பலபேர் திமுகவில் மாட்டக்கூடிய நிலைமை வரும்.
கேள்வி:- கொடநாடு கொலை குறித்து மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம். இது கட்சியின் மாநாடு; இதில் எங்கள் சாதனைகளையும் ஆட்சியின் அவலங்களையும் சொல்லுவோம்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கூறி தர்ம யுத்தம் நடத்தினார். அதற்கு அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு ஓபிஎஸ் சென்றாரா? அப்படி சென்றும் சசிகலாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஓபிஎஸ் சொல்லிவிட்டார்.
எங்களை பொறுத்தவரை கொடநாடு கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது கோரிக்கை. கொடநாடு கொலை வழக்கு 90 சதவீதம் முடிந்து விட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்?
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டசபையில் ஓபிஎஸ் சாலை மறியல் செய்தார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
டாபிக்ஸ்