Sangeetha: ‘எல்லாமே சேகர்பாபு அண்ணனுக்காக’ - அமைச்சரை புகழ்ந்த தள்ளிய சங்கீதா!
Mar 06, 2023, 09:18 PM IST
படிப்படியாக உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் அவருக்கு அந்த இடம் மிகவும் பொருத்தமானது இந்த ஆட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை துறைமுகம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகை சங்கீதா முதல்வர் முக ஸ்டாலின் குறித்தும் அமைச்சர் சேகர் பாபு குறித்தும் பேசியவற்றை இங்கு பார்க்கலாம்
மேடையில் சங்கீதா பேசும் போது, “ எதற்குமே நான் பயப்படமாட்டேன். மிகவும் தைரியசாலி என்று என்னை சொல்வர். ஆனால் அரசியல் மேடை அப்படி இல்லை; காலையில் இருந்தே கையெல்லாம் உதறுகிறது. அரசியல் அவ்வளவு புனிதமானது. அரசியல் என்று சொன்னாலே அது கேலி விஷயமாக மாறிவிட்டது. யாராவது ஒருவர் தவறான ஒரு விஷயம் செய்துவிட்டால் அவன் அரசியல் செய்வான் என்றே சொல்கிறார்கள்.
நல்ல வேலை ஒன்றை ஒருவர் செய்கிறார் என்றால் அதை தூரத்தில் இருந்து ஒருவர் கேலி செய்து கொண்டே இருப்பர். இவர்களெல்லாம் செய்கிற வேலைகளை நிம்மதியாக செய்ய விட்டாலே நாமெல்லாம் எங்கேயோ போய்விடுவோம்.
யாரையும் தனிப்பட்டு நான் சொல்ல விரும்பவில்லை. இன்றைய காலத்தில் மற்றவர்களை கேலி செய்வதே ட்ரெண்டாகிறது. அதை விட கேவலமான விஷயம் ஒன்றுமே இல்லை.
சேகர்பாபு அண்ணா முதல்வருக்காக ஒரு மாதத்தில் 90 நிகழ்ச்சிகளை நடத்துகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம். சேகர் பாபு அண்ணன் மேலே எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அரசியல் என்றாலே பயம், கூச்சம் இருக்கும். ஆனால் சேகர் பாபு அண்ணன் கூப்பிட்டால் மட்டும் எங்கிருந்தாலும் நான் வந்து விடுவேன்.
எங்கிருந்து எனக்கு அந்த தைரியம் வருகிறது என்று தெரியவில்லை. கருணாநிதி மகன் என்பதாலாயே முதல்வர் அந்த இடத்திற்கு வரவில்லை. படிப்படியாக உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு அந்த இடம் மிகவும் பொருத்தமானது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு நிறைய தைரியமாக இருக்க சொல்லி கொடுங்கள். அதே போல ஆண்பிள்ளைகளுக்கு பெண்களை மரியாதை கொடுக்க கற்றுக்கொடுங்கள்.” என்றார்.
டாபிக்ஸ்