தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Actor Vijay Meets Students: மீண்டும் களத்தில் இறங்கும் தவெக தலைவர் விஜய்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

Actor Vijay Meets Students: மீண்டும் களத்தில் இறங்கும் தவெக தலைவர் விஜய்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

Karthikeyan S HT Tamil

Jun 10, 2024, 11:39 AM IST

google News
Actor Vijay, TVK: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க நடிகர் விஜய் முடிவெடுத்துள்ளார்.
Actor Vijay, TVK: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க நடிகர் விஜய் முடிவெடுத்துள்ளார்.

Actor Vijay, TVK: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க நடிகர் விஜய் முடிவெடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழும் ஊக்கத்தொகையும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு வழங்கினார். இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

அதேபோல், இந்தாண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்க நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் முடிவு செய்துள்ளார். இந்த நிகழ்வினை இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளார்.

இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு

இந்த ஆண்டும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்க உள்ளார். முதல்கட்டமாக, வரும் 28 ஆம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதில், கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க உள்ளார் .

இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 3ஆம் தேதி சென்னை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க உள்ளார். இதனை விஜய், பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்க உள்ளார்.

புஸ்ஸி ஆனந்த் பதிவு

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் "தமிழக வெற்றிக் கழகம்" சார்பாக பாராட்ட உள்ளார்.

முதற்கட்ட நிகழ்வு 28.06.2024-ல் சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சு, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால், இந்தாண்டு இரண்டு கட்டங்களாக நடத்த முடிவெடுத்துள்ளனர். முதல் கட்டமாக இந்த மாத இறுதியிலும், இரண்டாம் கட்டம் அடுத்த மாதத்திலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி