தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin: Purple நிற பாக்கெட்! நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பசும்பால் - ஆவின் புதிய அறிமுகம்

Aavin: Purple நிற பாக்கெட்! நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பசும்பால் - ஆவின் புதிய அறிமுகம்

May 10, 2023, 12:31 PM IST

உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும் விதமாக ஆவின் நிறுவனம் புதிதாக செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது.
உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும் விதமாக ஆவின் நிறுவனம் புதிதாக செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது.

உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும் விதமாக ஆவின் நிறுவனம் புதிதாக செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் நிறுவனம் சார்பில், பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் கிராமப்புற பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து, ஒன்றியங்கள் மற்றும் இணைய பால் பண்ணைகளில் பதப்படுத்தி, மாநிலம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

இதையடுத்து ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பால் விலை அரை லிட்டர் ரூ.22 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தை பெற்று தருவதில் வைட்டமின் டி பங்களிப்பு பெரும் அளிவில் இருப்பதால், பாலில் வைட்டமின் டி செறிவூட்டுவது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் என சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பசும்பால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட இந்த பசும்பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பார்வை திறனை மேம்படுத்துகிறது. எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk) பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் (Full Cream Milk) ஆரஞ்சு நிறத்திலும், டீ மேட், கொழுப்புச் சத்து நிறைந்த பால் (Full Cream Milk) சிவப்பு) நிறத்திலும், பசும்பால் பர்ப்பில் நிறத்திலும், ஆவின் கோல்ட் பால் மஞ்சள் நிறத்திலும் விநியோகம் செய்யப்படுகின்றன.

அடுத்த செய்தி