தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆதி தமிழர் பேரவையினர்!

காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆதி தமிழர் பேரவையினர்!

Divya Sekar HT Tamil

Feb 14, 2023, 05:26 PM IST

google News
Madurai Lovers Day : மதுரையில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஆதி தமிழர் பேரவையினர்.
Madurai Lovers Day : மதுரையில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஆதி தமிழர் பேரவையினர்.

Madurai Lovers Day : மதுரையில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஆதி தமிழர் பேரவையினர்.

காதலர்களுக்கு மிகவும் பிடித்த மாதம் என்றால் அது நிச்சயம் பிப்ரவரி மாதம் தான். உலகம் முழுக்க வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தின கொண்டாட்டத்தில் காதலர்கள் மூழ்கி இருப்பார்கள்.

காதலை கொண்டாடும் விதமாக இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், உங்களுக்கு பிரியானமானவர்களிடம் காதலை வெளிப்படுத்த இதைவிட சிறந்த நாள் இல்லை எனக் கூறலாம். 

லெட்டர் காதல், டெலிபோன் காதல், எஸ்எம்எஸ் காதலை கடந்த தற்போது டிஜிட்டல் முறையில் காதலர்கள் காதலித்து வருகின்றனர்.

காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே தொடங்கிவிடுகிறது. முதலில் ரோஸ் டே எனப்படும் ரோஜா தினம், ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே , ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டேவை தொடர்ந்து தான் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், காதலர் தினத்தினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் ஏராளமான காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் ராஜாஜி பூங்காவிற்கு இன்று வருகை தந்த காதல் ஜோடிகளுக்கு திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஆதி தமிழர் பேரவையினர் இனிப்புகளை வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து காதல் ஜோடிகள் இனிப்புகளை ஊட்டிவிட்டு பரிமாறிகொண்டனர். இதனை தொடர்ந்து பூங்கா முன்பாக காதலுக்கு ஆதரவு தெரிவித்தும், காதல் வாழ்க என கூறியும் முழக்கங்களை எழுப்பிய திராவிட விடுதலை கழகத்தினர் இளைஞர்களை சந்தித்து மனிதநேயம் வளர சாதி மத பேதமின்றி காதலியுங்கள் என அறிவுரை வழங்கினர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி