தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kovilpatti Murder : பைக்கில் வந்த மர்ம கும்பல்.. தலை துண்டாகி பலியான இளைஞர்.. முன்விரோதம் தான் காரணமா?

Kovilpatti Murder : பைக்கில் வந்த மர்ம கும்பல்.. தலை துண்டாகி பலியான இளைஞர்.. முன்விரோதம் தான் காரணமா?

Divya Sekar HT Tamil

Nov 24, 2023, 10:46 AM IST

google News
கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் முன் விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் முன் விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் முன் விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரின் மகன் அருண் பாரதி (20). அதே பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ் (19). இருவரும் நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (நவ.23) இருவரும் கோவில்பட்டி பைபாஸ் சாலை, ஆலம்பட்டி அய்யனார் கோயில் பின்புறம் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு எதிர்பாராத விதமாக ஒரு பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அருண் பாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் தலை துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அருண் பாரதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உயிரிழந்த அருண் பாரதியின் உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்நிலையில், முன்விரோதம் காரணமாக தான் மர்ம நபர்களால் அருண் பாரதி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கோவில்பட்டி மணியாச்சியைச் சேர்ந்த முத்துராமன் மற்றும் ராஜபாண்டி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துராமன் தரப்பினரைச் சேர்ந்த சிலரை ராஜபாண்டி தரப்பினர் அரிவாளல் வெட்டியுள்ளனர்.

அந்த சம்பவத்தில் ராஜபாண்டி தரப்பில் அருண் பாரதி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் போலீசாரால் அருண் பாரதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி