தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vikravandi By Election : வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்தி குத்து.. பதற்றத்தில் விக்ரவாண்டி தேர்தல் களம்! 11 மணி நிலவரம்!

Vikravandi By Election : வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்தி குத்து.. பதற்றத்தில் விக்ரவாண்டி தேர்தல் களம்! 11 மணி நிலவரம்!

Jul 10, 2024, 11:47 AM IST

google News
Vikravandi By Election : விக்ரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை11 மணி நிலவரப்படி 29.97 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் T கொசப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் கனி மொழி என்ற பெண் வாக்களிக்க வந்தபோது அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்தினார்.
Vikravandi By Election : விக்ரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை11 மணி நிலவரப்படி 29.97 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் T கொசப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் கனி மொழி என்ற பெண் வாக்களிக்க வந்தபோது அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்தினார்.

Vikravandi By Election : விக்ரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை11 மணி நிலவரப்படி 29.97 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் T கொசப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் கனி மொழி என்ற பெண் வாக்களிக்க வந்தபோது அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்தினார்.

Vikravandi By Election : கொசப்பாளையத்தில் வாக்களிக்க வந்த பெண்ணை அவரது முன்னாள் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி 29.97 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் T கொசப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் கனி மொழி என்ற பெண் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தார். அங்கு வந்த அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய ஏழுமலையை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விக்ரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர 110 வாக்கு சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெக் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடையும். அதன் பின் வாக்கு பதிவு இயந்திரகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு கொண்டு செல்லப்படும். இதைத்தொடர்ந்து வரும் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார்.

ஜூலை 10ல் இடைத்தேர்தல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்தது. வேட்புமனுவைத் தாக்கல் ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஜூலை 10 தேதியான இன்று வாக்கு பதிவு நடைபெறு கிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வேட்பாளர்கள் விபரம்

ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது. இதனால் திமுகவுக்கு போட்டியாக பாமக வேட்பாளர் சி.அன்பு மணி போட்டியிடுகிறார். நாம் தமிழகர் கட்சியின் வேட்பாளராக டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் களத்தில் உள்ளனர்.

பதற்றமான வாக்கு சாவடிகள்

தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 276 வாக்கு சாவடிகளில் 44 வாக்கு சாவடிகள் பதற்றமான என கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என 1355 பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை