Salem: பேருந்துபின்பக்க சக்கரங்கள் இல்லாமல் ஓடியதால் பரபரப்பு!
Dec 16, 2023, 05:28 PM IST
பேருந்து பின்பக்க டயர்கள் இல்லாமல் சிறிது தூரம் ஓடியது. இதில் பேருந்தில் பின்பகுதி சாலையில் உரசியபடி சென்றதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பயந்து சத்தமிட்டனர்.
சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பின்பக்க சக்கரங்கள் இல்லாமல் ஓடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் அதில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேலம் எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசை சேர்ந்த விஜயன். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார், இவர் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு எடப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பேருந்தில் நடத்துனர் கதிர் உட்பட பயணிகள் பல இருந்தனர் அப்போது அரியானூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் முன் பக்க டயர் திடீரென வெடித்தது இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது இந்த நிலையில் சில வினாடிகளில் பேருந்தின் பின்பக்க சக்கரங்களின் அச்சு முறிந்து பின்பக்க சக்கரங்கள் பேருந்தில் இருந்து தனியாக கலந்து விழுந்தது.
இதையடுத்து பேருந்து பின்பக்க டயர்கள் இல்லாமல் சிறிது தூரம் ஓடியது. இதில் பேருந்தில் பின்பகுதி சாலையில் உரசியபடி சென்றதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பயந்து சத்தமிட்டனர்.
சிறிது தூரத்தில் ஓட்டுநர் பேருந்து சாதுரியமாக நிறுத்தினர். பின்னர் பேருந்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். தகவல் அறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பின்னர் பயணிகளை மீட்டு வேறு பேருந்தில் அவரவர் ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுத்தனர் இந்த பெயரில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். தற்போது அதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்