தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சுதந்திர தின நாளான இன்று இந்த இடங்களை மிஸ் செய்யாமல் போய் பாருங்கள்!

சுதந்திர தின நாளான இன்று இந்த இடங்களை மிஸ் செய்யாமல் போய் பாருங்கள்!

Aug 15, 2022, 11:50 AM IST

google News
சுதந்திரதினமான இன்று கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல் முதல் நாட்டுப்பற்று பாடல்கள், கதைகளை கேட்பது என்று மட்டும் இல்லாமல் சுதந்திர அடைவதற்கு முக்கிய பங்கு வகித்த இந்த இடங்களுக்கு தவறாமல் சென்று வாருங்கள்.
சுதந்திரதினமான இன்று கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல் முதல் நாட்டுப்பற்று பாடல்கள், கதைகளை கேட்பது என்று மட்டும் இல்லாமல் சுதந்திர அடைவதற்கு முக்கிய பங்கு வகித்த இந்த இடங்களுக்கு தவறாமல் சென்று வாருங்கள்.

சுதந்திரதினமான இன்று கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல் முதல் நாட்டுப்பற்று பாடல்கள், கதைகளை கேட்பது என்று மட்டும் இல்லாமல் சுதந்திர அடைவதற்கு முக்கிய பங்கு வகித்த இந்த இடங்களுக்கு தவறாமல் சென்று வாருங்கள்.

சுதந்திர தினிமான இன்று பொது விடுமுறை என்பதால் வீட்டிலேய நேரத்தை செலவழிக்காமல் சுந்திரத்தின் நினைவாக அமைக்கப்பட்ட சில இடங்களுக்கு சென்று பொழுதை கழிக்கலாம்.

இந்திய சுதந்திரத்தின் மகத்துவத்தை கூறும் விதமாக தமிழகத்தில் அமைந்துள்ள சில இடங்களை பற்றி பார்க்கலாம்.

காந்தி அருங்காட்சியகம், மதுரை

கோயில் நகரமான மதுரை சுதந்திர நினைவுகளை சுமந்திருக்கும் இடமாக காந்தி மியூசியம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த அருங்காட்சியகத்துக்கு தேசிய அளவிலிருந்து சர்வதேச அளவிலும் ஏராளமான தலைவர்கள் வருகை புரிந்துள்ளார்கள்.

காந்தியடிகள் மறைவுக்கு பின்னர் இந்தியாவில் அமைக்கப்பட்ட 7 நினைவு அருங்காட்சியங்களில் மதுரையில் உள்ள இந்த அருங்காட்சியம் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமில்லாமல் வரலாற்று பின்னணியையும் கொண்டுள்ளது.

1921ஆம் ஆண்டு மதுரை வந்த காந்தியடிகள் இங்குள்ள மக்களின் நிலையை பார்த்து மேலாடை அணியப்போவதில்லை என்று முடிவெடுத்தார். இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு மேலாடை அணிகிறார்களோ அன்றுதான் நானும் மேலாடை அணிவேம் என்றும் சபதம் ஏற்றார். அதை பின்பற்றி கடைசி வரை வாழ்ந்தும் காட்டினார்.

காந்தியடிகள் இந்திய மக்களின் நலனை முன்னிருந்தி முக்கியமான முடிவு எடுக்கப்பட்ட இடமாக மதுரை அமைந்திருந்த நிலையில் இங்கு அருங்காட்சியகம் வைக்க முடிவு செய்யப்பட்டது.

1670ஆம் ஆண்டில் ராணிமங்கம்மாள் அரண்மனையாகவும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரசின் உயர் அலுவர்கள் தங்கும் இடமாக இருந்த கட்டடம் பின்னர் 1959இல் காந்தி அருங்காட்சியமாக மாற்றப்பட்ட அதனை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.

இந்தியாவின் பழமையான காந்தி அருங்காட்சியமாக திகழும் இங்கு இந்திய சுதந்திர வரலாறு, காந்தி வாழ்க்க வரலாறு என பலவேறு விஷயங்களை புகைப்படங்களோடு அமைந்துள்ளது.

வேலூர் கோட்டை, வேலூர்

தென்இந்திய சிப்பாய்களால் 1806ஆம் ஆண்டு பிரட்டீஷ் ராணுவத்தினரின் அடக்கு முறைக்கு எதிராக வேலூர் கோட்டையில் இந்திய சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டினர். 'வேலூர் சிப்பாய் எழுச்சி’ என்று கூறப்படும் இந்த நிகழ்வே இந்திய சுதந்திரப் போரின் ஆரம்ப எழுச்சியாக கூறப்படுகிறது

விஜயநகர பேரரசால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில், 191 அடி ஆகலம், 29 அடி ஆழம் கொண்ட அகழி கோட்டையை சுற்றிலும் அமைந்துள்ளது.

சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோட்டையில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட திப்பு சுல்தால், இலங்கை கண்டி அரசின் தமிழ் மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்டனர்.

ஆங்கிலேயர்களுக்கான எதிரான முதலாவது கிளர்ச்சியான சிப்பாய் கலகம் இங்குதான் நடந்தது. தங்களுக்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதற்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு தண்டனை வழங்கி அவமானபடுத்தியதை தாங்கிக்கொள்ள முடியாமலும் ஜூலை 10 அதிகாலை 2 மணிக்கு இந்திய சிப்பாய்கள் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி கிழக்கு இந்திய கம்பெனி ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சுதந்திர போரின் ஆரம்பபுள்ளி எனக் கூறப்படும் இந்த சிப்பாய் கழகம் வேலூர் கோட்டையில்தான் நிகழ்ந்தது. தற்போது இங்கு திப்புமஹால், ஹைதர்மஹால், கண்டிமஹால், ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி ஆகியவை அமைந்துள்ளது. அத்துடன் அரசு அருகாட்சியகமும் 1999ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

கட்டபொம்மன் மணிமண்டபம், கயத்தாறு

உனக்கு ஏன் தர வேண்டும் வரி, கிஸ்தி என வீரம் பொங்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிந்த கேட்ட கட்டபொம்மன் அவர்களுக்கு எதிராக பாளையக்காரர்களை அணி திரட்டியதாக கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் 1799ஆம் ஆண்டு புளியமரத்தில் தூக்கிலடப்பட்டார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திர உணர்வை மக்களிடையே ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், தனது உயிரை நீத்த கட்டபொம்மன் நினைவாக கயத்தாறில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அங்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு குறித்து சித்திரங்களும், கட்டபொம்மனுக்கு 7.25 அடி உயரத்தில் வெண்கல சிலையும் இடம்பெற்றுள்ளது.

பூலித்தேவன் நினைவு மாளிகை, சிவகிரி

வீரபாண்டிய கட்டபொம்மன் போல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு என முதன் முதலில் முழக்கமிட்ட பாளையக்காரராக பூலித்தேவன் இருந்துள்ளார். 1750இல் திருச்சியில் ஆங்கிலேயர்களின் கொடியை ஏற்றிய ராபர்ட் கிளைவ், 1755ஆம் ஆண்டு கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான் உள்பட பல ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றியும் கண்டுள்ளார்.

இவரது நினைவாக தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள நெல்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவன் நினைவு மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பூலித்தேவனுக்கு சிலை, அவரது வாழ்ககை வரலாறு மற்றும் அவரது காலத்து நினைவு சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி