Christmas Special Buses :கிறிஸ்துமஸ் பண்டிகை - 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Dec 23, 2022, 07:15 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து பிறப்பைக் கிறிஸ்துமஸ் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிச. 25ஆம் தேதி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாகக் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட எந்தவொரு பண்டிகையும் கோலாகலமாகக் கொண்டாடப்படவில்லை. இப்போது தான் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
தற்போது, கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
அதே போல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் விடப்படவுள்ளது. இதனையொட்டி சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல முடிவு செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்லக்கூடும் என்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதேபோல் சனிக்கிழமையும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு மீண்டும் வருவதற்கும் போதுமான பேருந்துகள் இயக்க தயாராக உள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா பேரிடருக்கு பிறகு இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் வெள்ளிக்கிழமை முதலே பயணிக்கத் தொடங்கி விடுவர். எனவே பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர்செல்லக்கூடும் என்பதால் கூடுதல்பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று (டிச.23) சென்னையில் இருந்து 300 சிறப்புபேருந்துகளையும், நாளை (டிச 24) 300 சிறப்பு பேருந்துகளையும் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகமாக பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்குவதற்கு போதியபேருந்துகள் உள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருவதற்கும் போதிய பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம்” என்றனர்.
முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்