தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Villupuram : விழுப்புரத்தில் பரபரப்பு .. குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!

Villupuram : விழுப்புரத்தில் பரபரப்பு .. குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!

Divya Sekar HT Tamil

Aug 19, 2023, 04:38 PM IST

google News
விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்; 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்; 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்; 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக உணவு பொருட்களில் கரப்பான் பூச்சி. சாம்பாரில் எலி, கெட்டு போன சிக்கன் என பல்வேறு விதமான உணவுகளை சாப்பிட்டு பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

தற்போது விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா முட்டத்தூர் கிராமத்தில் நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் குல்பி ஐஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கி சாப்பிட்ட 50 பள்ளி மாணவர்கள் உட்பட 80 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள பள்ளி குழந்தைகள் என்பதால் முட்டத்தூர் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கெட்டுப்போன குல்பி ஐஸ் சாப்பிட்டதன் காரணமாகதான் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகனத்தில் குல்பி ஐஸ் விற்பனை செய்த ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(45) என்பவரை கஞ்சனூர் போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி