Thanjavur Accident : காலையிலேயே கோர விபத்து.. அப்பளம்போல் நொறுங்கிய வேன்.. உடல் நசுங்கி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி!
Jan 20, 2024, 08:24 AM IST
தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அருகே இன்று அதிகாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது.
இதனால் வேனில் பயணித்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 3 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் மொத்தம் 11 பேர் பயணம் செய்ததுள்ளனர். இதில் பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னம்மாள் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு அவர்கள் 7 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது விபத்தில் சிக்கியவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வேனில் சென்றதும் அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வேளாங்கண்ணிக்கு செல்லும் போது இந்த கோர விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்