தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dengue Fever : புதுக்கோட்டையில் வேகமாக பரவும் டெங்கு - மேலும் 3 பேருக்கு பாதிப்பு!

Dengue Fever : புதுக்கோட்டையில் வேகமாக பரவும் டெங்கு - மேலும் 3 பேருக்கு பாதிப்பு!

Divya Sekar HT Tamil

Oct 12, 2023, 10:18 AM IST

google News
புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை அவ்வப்போது பெய்து வருவதால், ஆங்காங்கே பல்வேறு காய்ச்சல்களால் குழந்தைகளும், பெரியவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதில் மனித உயிர்கள் பலியாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு சார்பில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 34 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 93 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏடிஸ் கொசு டெங்குவை பரப்புகிறது. இந்த கொசுக்கள் தேங்கியிருக்கும் நீரில் முட்டையிட்டு பெருகுகின்றன. கட்டுமான இடங்கள், தண்ணீர் தொட்டிகள், நீச்சல் குளங்கள், தாவரங்கள், நீண்ட நாட்களாக போடப்பட்ட குப்பைகள் இவற்றில் எல்லாம் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. ஒரு வாரத்துக்கும் மேல் அதிக காய்ச்சல் இருக்கும். தசை வலி, மூட்டு வலியும் இருக்கும். கண்களில் எரிச்சல், காய்ச்சல் ஏற்படும். ஏற்கனவே டெங்கு வந்தவர்களுக்கு மீண்டும் வந்தால் உயிரிழப்பு ஏற்படும்.

குறிப்பாக மழைக்காலத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் தொல்லை ஏற்படும். குளிர் அதிகம் வீசுவது மற்றும் தேங்கும் மழைநீரால், குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படும். அவற்றில் மலேரியா, டெங்கு, உடல் நீர்ச்த்து இழத்தல், டைபாஃய்ட், சிக்குன் குனியா, காலரா, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு பிரிச்னைகள் ஏற்படும்.இவற்றில் எல்லாவற்றிகும் ஒரே சில அறிகுறிகள் பொதுவாக காணப்படும். அவை உடும் உடல் வலி, காய்ச்சல், சொரிகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஆகும்.

இவை உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படக்கூடியவை. இவையின்றி குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வேறு தனியாக ஏற்படும். எனவே உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், கொசுக்கள் இன்றியும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.கொசுக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துங்கள். குழந்தைகளை மழை வெள்ள நீரில் ஆட்டம் போட அனுமதிக்காதீர்கள்.வீட்டில் சுத்தம் மிகவும் அவசியம். வீட்டில் உள்ள தலையணை உறைகள், மெத்தை உறைகள் ஆகியவற்றை நன்றாக அலசி காயவைத்து பயன்படுத்துங்கள். வீட்டில் மற்ற பொருட்கள் மற்றும் இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி