தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi: தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்.. பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Kallakurichi: தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்.. பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Karthikeyan S HT Tamil

Jun 20, 2024, 08:13 AM IST

google News
Kallakurichi Illicit liquor: கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
Kallakurichi Illicit liquor: கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

Kallakurichi Illicit liquor: கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம்‌ காலனி பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவு அதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

45-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கருணாபுரத்தை சோ்ந்த கணேசன் மகன் பிரவீன்(29), சிவா (32), மகேஷ் (60), ஜெகதீசன் (70), ஏசுதாஸ் (36), கண்ணன் (70), குரு (48), மணி (48), சங்கா் (35), பொியசாமி (40), சுப்பிரமணியன் (56), பரமசிவம் (56), குரு (44), செந்தில், சுரேஷ், குப்பன் மனைவி இந்திரா, சுரேஷ் மனைவி வடிவு (35), ரஞ்சித்குமாா் (37), கிருஷ்ணமூா்த்தி உள்பட 45-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம்

பின்னர், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 16 பேர் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல, சேலம் அரசுமருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75),தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

விஷச்சாராயம் குடித்தது தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 32ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆட்சியர், எஸ்.பி. மீது நடவடிக்கை

ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.

முதல்வர் வேதனை

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது,

"கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி