தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Diwali: தீபாவளி பண்டிகை: மாநிலம் முழுவதும் விதிமீறலில் ஈடுபட்டதாக 2095 வழக்குகள் பதிவு

Diwali: தீபாவளி பண்டிகை: மாநிலம் முழுவதும் விதிமீறலில் ஈடுபட்டதாக 2095 வழக்குகள் பதிவு

Marimuthu M HT Tamil

Nov 13, 2023, 05:31 PM IST

google News
தீபாவளி பண்டிகையின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தீபாவளி பண்டிகையின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தீபாவளி பண்டிகையின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக இதுவரை சுமார் 2095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை பொதுமக்கள் தீபாவளியை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இந்நிலையில் மிகுந்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்தது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்தது, மது அருந்திவிட்டு வாகனங்களை அத்துமீறும் வகையில் ஓட்டியது, பொதுமக்களைத் தொந்தரவு செய்தது, சாதுர்யமாக ஓட்டாமல் வாகன விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையில் விதிமீறலில் ஈடுபட்டதாக 2095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சென்னையில் மது மற்றும் கஞ்சா போதையில் காரை ஓட்டி நடந்த வாகன விபத்தில் சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர் மற்றும் ஒரு காவலாளி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி