தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Plus 1 Exam Results: 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்? - முழு விபரம்!

Plus 1 Exam Results: 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்? - முழு விபரம்!

Karthikeyan S HT Tamil

May 19, 2023, 04:22 PM IST

Plus 1 Exam Results: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன.
Plus 1 Exam Results: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன.

Plus 1 Exam Results: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் இன்று (மே 19) பிற்பகல் வெளியாகின. மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.25 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 95.37 சதவீத பேரும், வேதியியல் பாடத்தில் 96.74 சதவீத பேரும், உயிரியல் பாடத்தில் 96.62 சதவீத பேரும், கணிதப் பாடத்தில் 96.01 சதவீத பேரும், தாவரவியல் பாடத்தில் 95.30 சதவீத பேரும், விலங்கியல் பாடத்தில் 95.27 சதவீத பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.25 சதவீத பேரும், வணிகவியல் பாடத்தில் 94.33 சதவீத பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 94.97 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடப் பிரிவுகளில் 93.38 சதவீத பேரும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 88.08 சதவீத பேரும், கலைப் பிரிவுகளில் 73.59 சதவீத பேரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 81.60 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 96.38 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 82.58 சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.

முக்கியப் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை விவரம்:

தமிழ் - 9

ஆங்கிலம் - 13

கணிதம் - 17

இயற்பியல் - 440

வேதியியல் - 107

உயிரியியல் - 65

தாவரவியல் - 2

விலங்கியல் - 34

கணிணி அறிவியல் - 940

கணக்கு பதிவியல் - 995

கணிணி பயன்பாடு - 598

வணிகவியல் - 214

இந்த கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி