தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  10th Mark Statement : 10th Class Students Go! Distribution Of Provisional Score Certificates From Today!

10th Mark Statement : 10ம் வகுப்பு முடித்த மாணவர்களே கிளம்புங்க! இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம்!

Priyadarshini R HT Tamil

May 26, 2023, 08:11 AM IST

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அவரவர் படித்த பள்ளியிலேயே வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அவரவர் படித்த பள்ளியிலேயே வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அவரவர் படித்த பள்ளியிலேயே வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த மாணவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக், கேட்டரிங் மற்றும் பதினொன்றாம் வகுப்பு உள்ளிட்ட உயர்கல்வி வகுப்புகளில் சேர்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு இங்கெல்லாம் சேர்வதற்கு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயமான ஒன்றாகும். 

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

எனவே மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் அடுத்த வகுப்புகளில் எளிதாக சேர்வதற்கு வாய்ப்பாக மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இதையடுத்து இன்று முதல் மாணவர்கள் அவரவர் படித்த பள்ளியின் மூலமாகவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் தற்காலிக சான்றிதழை தேர்வு துறை இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்து மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி மற்றும் மதிப்பெண் ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதை என்பதை சரிபார்த்த பின்னரே மாணவர்களிடம் வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அது பள்ளி கல்வித்துறை இயக்கத்தின் சார்பில் திருத்தங்கள் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தனியாக எழுதிய தனித்தேர்வர்கள் அவரவர் தேர்வு எழுதிய மையங்களில் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சான்றிதழ்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அவற்றை சரிசெய்வதற்காக குறிப்பிட்ட நாட்கள் வழங்கப்படும். அப்போது அவற்றை சரிசெய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்களை வழங்கும்போது, மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண் குறிப்பிடும் இடத்தில் உண்மைச்சான்றிதழை சரிபார்க்க என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்