Minister Ma. Subramanian: மருந்து தட்டுப்பாடு தொடர்பாக புகார் எண் அறிவிப்பு
Oct 08, 2022, 03:53 PM IST
தமிழகத்தில் செயற்கையாக மருந்துதட்டுப்பாடு உள்ளதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்று சொன்னால் புகார் தெரிவிக்கும் புகார் எண்ணையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் போதையில்லா தமிழநாட்டை உருவாக்கும் விதமாக விழப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் இந்த மினி மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு முன்பை விட கணிசமாக குறைந்துள்ளது. 169 டன் பான்பாரக் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுபாடு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. சந்தேகம் இருப்பவர்கள் யார்வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் உள்ள 32 கிடங்குகளில் எவ்வளவு மருந்துகள் உள்ளன என்பதை அறியலாம். அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை என கூறினால், 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
டாபிக்ஸ்