தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Bray Wyatt Passes Away: Wwe சாம்பியன் பிரே வியாட் 36 வயதில் மரணம்-மனம் உடைந்த தி ராக்

Bray Wyatt Passes Away: WWE சாம்பியன் பிரே வியாட் 36 வயதில் மரணம்-மனம் உடைந்த தி ராக்

Manigandan K T HT Tamil

Aug 25, 2023, 04:47 PM IST

google News
மல்யுத்த வீரர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் இதுகுறித்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாமல் அவரது குடும்பத்தினர் இருந்து வந்தனர். (@TheRock)
மல்யுத்த வீரர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் இதுகுறித்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாமல் அவரது குடும்பத்தினர் இருந்து வந்தனர்.

மல்யுத்த வீரர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் இதுகுறித்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாமல் அவரது குடும்பத்தினர் இருந்து வந்தனர்.

WWE சாம்பியன் பிரே வியாட், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 36. மூன்று முறை WWE உலக சாம்பியனான பிரே வியாட், காலமானதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மல்யுத்த வீரர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் இதுகுறித்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாமல் அவரது குடும்பத்தினர் இருந்து வந்தனர்.

இந்த செய்தியை WWE கன்டென்ட் அதிகாரி ட்ரிபிள் எச் அறிவித்தார், "விண்ட்ஹாம் ரோட்டுண்டா என்ற இயற்பெயர் கொண்ட வியாட் எதிர்பாராதவிதமாக காலமானார்" என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டார். இவருக்கு டுவைன் ஜான்சன் என்ற தி ராக்கும் அஞ்சலி செலுத்தினார்.

வியாட் மீது எப்போதும் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருப்பதாக ஜான்சன் தெரிவித்துள்ளார். அவரது பிரசன்ஸ், ப்ரோமோக்கள், ரிங் ஒர்க் மற்றும் WWE யுனிவர்ஸுடனான தொடர்பு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் தனித்துவமான, அரிதான ஒருவர் உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது என்றார் ஜான்சன்.

WWE வர்ணனையாளர் மிக் ஃபோலி கூறுகையில், "நான் பிரே வியாட்டை மிகவும் உயர்வாக நினைத்தேன். அவர் ஒரு உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்டவர்; மல்யுத்தம் இதுவரை கண்டதிலேயே மிகவும் முக்கியமான ஒருவர் இவராகும்." என்றார்.

வியாட் தனது தாத்தா பிளாக்ஜாக் முல்லிகன், அவரது தந்தை மைக் ரொட்டுண்டா மற்றும் அவரது இளைய சகோதரர் போ டல்லாஸ் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

மே 23, 1987 அன்று புளோரிடாவின் புரூக்ஸ்வில்லில் பிறந்த வியாட் உயர்நிலைப் பள்ளியில் மாநில மல்யுத்த சாம்பியனாக இருந்தார்.

2009ம் ஆண்டு முதல் புரொஃபஷனல் மல்யுத்த வீரராக உருவெடுத்தார். ஹஸ்கி ஹாரிஸ், அலெக்ஸ் ரொட்டுண்டா, டியூக் ரொட்டுண்டோ, ஃபியன்ட் உள்ளிட்ட பல பெயர்களில் சண்டை போட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி