தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wpl 2023: முதல் மகளிர் ஐபிஎல் கோப்பை யாருக்கு? டெல்லி - மும்பை மோதல்

WPL 2023: முதல் மகளிர் ஐபிஎல் கோப்பை யாருக்கு? டெல்லி - மும்பை மோதல்

Mar 26, 2023, 08:21 AM IST

முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று பார்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா கேப்டன் vs அயல்நாட்டு கேப்டன் மோதும் இந்தப் போட்டியில் மகுடம் சூடப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும். (PTI)
முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று பார்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா கேப்டன் vs அயல்நாட்டு கேப்டன் மோதும் இந்தப் போட்டியில் மகுடம் சூடப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று பார்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா கேப்டன் vs அயல்நாட்டு கேப்டன் மோதும் இந்தப் போட்டியில் மகுடம் சூடப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

மகளிர் ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியனஸ் அணிகள் இருந்து வந்துள்ளன. லீக் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் கடைசி நாள் லீக் ஆட்டம் வரை புள்ளிப்பட்டியலில் மும்பை அணி முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் கடைசி நாளில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக அசத்தல் வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ், ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

இதனால் இரண்டாவது இடத்துக்கு சென்ற மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டர் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது.

இதையடுத்து மகளிர் ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளாக இருந்து வரும் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டி பார்போர்ன் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

மும்பை அணியின் முக்கிய வீராங்கனைகளான நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கெளர், யஸ்திகா பாட்யா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளார்கள்.

அதேபோல் டெல்லி அணியிலும் மெக் லேனிங், ஷெபாலி வர்மா, அலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப் ஆகிய மும்பை பெளலர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கு இடையிலான பேட்டிங் பவரை பிரதிபலித்து கோப்பையை கைப்பற்றும் என நம்பலாம்.

பிட்ச் நிலவரம் எப்படி?

இந்த சீசனில் பார்போர்ன் மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி ஸ்கோர் 138 என உள்ளது. அத்துடன் பேட்டர்களின் சொர்க்கபுரியாகவும் இருந்துள்ளது. முதலில் பேட் செய்த அணி 4 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணி 6 போட்டிகளிலுந் வெற்றிகளை குவித்துள்ளது. ஆடுகளம் ஸ்பின் பெளலர்களை விட சற்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், கடந்த சில போட்டிகளில் சேஸிங் செய்த அணியே சாதித்துள்ளது.

மழை வாய்ப்பு?

மும்பையில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகரி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பனிபொலிவும் குறைந்து விட்டதால் பந்து வீச்சாளர்கள் ஒளி விளக்குகளுக்கு மத்தியில் பந்து வீசுவதில் எந்த சிரமமும் இருக்காது.

டாபிக்ஸ்