World University Games: 10மீ ஏர் ரைபிள் சுடுதல் - தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்! 3 தங்கம் வென்று இந்தியா முதலிடம்
Jul 29, 2023, 04:21 PM IST
உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீராங்கனையான இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பான FISU சார்பில் FISU உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டமான இன்று இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய மகளிர் அணியான மனு பாக்கர், யஷஸ்வினி தேஸ்வால் மற்றும் அபித்யா பாட்டீல் ஆகியோர் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளனர். அணிகளுக்கான போட்டி பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை சீனா அணியும், வெண்கல பதக்கத்தை ஈரான் அணியும் வென்றுள்ளது.
அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தனி நபர் பிரிவில் மனு பாக்கர் தங்கம் வென்றுள்ளார். ஹங்கேரி நாட்டை சேர்ந்த வீராங்கனை வெள்ளியும், சீனா தைப்பே நாட்டை சேர்ந்தவர் வெண்கலமும் வென்றுள்ளார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். இவர் 252.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில், இவர் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இதையடுத்து இந்த முறை தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
இவரது வெற்றி மூலம் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்துள்ளது. இந்த தற்போது பதக்க பட்டியலில் முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்யும் விதமாக வில்வித்தை கலப்பு பிரிவு போட்டியில் இந்தியர்களான் பிரகதி மற்றும் அமன் சைனி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இரண்டாம் சீட் ஜோடியான இவர்கள் முதல் சுற்றில் பிரான்ஸ் அணியை 153-151 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து அடுத்த போட்டியில் 152-151 கணக்கில் சீனாவை தோற்கடித்த நிலையில், நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் கொரியா அணியை எதிர்கொள்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்