தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Women's World Cup 2023: மகளிர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகளின் முழுப் பட்டியல்

Women's World Cup 2023: மகளிர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகளின் முழுப் பட்டியல்

Manigandan K T HT Tamil

Jul 03, 2023, 04:21 PM IST

google News
Football: குரூப் ஏ பிரிவில், நியூசிலாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. (AFP)
Football: குரூப் ஏ பிரிவில், நியூசிலாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

Football: குரூப் ஏ பிரிவில், நியூசிலாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வரும் 20ம் தேதி முதல் அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

32 அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடும் குரூப் கட்டத்துடன் போட்டி தொடங்குகிறது. பிரான்சில் நடந்த 2019 உலகக் கோப்பையில் 24 அணிகள் விளையாடின.

அணிகள் வெற்றி பெற்றால் மூன்று புள்ளிகளையும், டிராவுக்கு ஒரு புள்ளியையும் பெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 16வது சுற்றுக்கு முன்னேறும்.

நாக்-அவுட் சுற்றுகளில் ஒன்-ஆஃப் போட்டிகள் நடைபெறும். இது கூடுதல் நேரத்திற்கு செல்லலாம். பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் அவுட் முறையும் கடைப்பிடிக்கப்படும்.

குரூப் ஏ பிரிவில், நியூசிலாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

நட்சத்திர வீராங்கனை அடா ஹெகர்பெர்க் திரும்பியதைத் தொடர்ந்து நார்வே ஒரு பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. சுவிட்சர்லாந்து ஏற்கனவே ஃபேவரைட் அணியாக திகழ்கிறது. நியூசிலாந்து முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை எதிர்பார்க்கிறது.

முன்னாள் மெட்டில்டாஸ் பயிற்சியாளர் ஆலன் ஸ்டாஜ்சிக் தலைமையிலான பிலிப்பைன்ஸ் அணி முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நைஜீரியா, கனடா இடம்பிடித்துள்ளன.

சொந்த மண்ணில் தங்களை நிரூபித்து, இந்த ஆண்டு இதுவரை ஒரே ஒரு தோல்வியை மட்டுமே பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, உலக அரங்கில் தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

உலகக் கோப்பை

ஒலிம்பிக் சாம்பியனான கனடா மற்றும் உலகக் கோப்பையை வென்ற நைஜீரியா ஆகியவை அறிமுக அணிகளான அயர்லாந்துக்கு அச்சுறுத்தும் அணிகளாகும். ஆனால், சமீபத்திய போட்டி முடிவுகளை காணும்போது அயர்லாந்தும் சற்றும் சளைத்தது இல்லை.

குரூப் சி பிரிவில், ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜாம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

கோச், சீனியர் பிளேயர்களுக்கு இடையே முட்டல் மோதல் போக்கைத் தொடர்ந்து ஒரு வழியாக உலகக் கோப்பைக்கு வந்துள்ளது ஸ்பெயின்.

2011-ல் வெற்றியும், 2015-ல் 2-வது இடமும் பெற்ற ஜப்பான் அணி, 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரவுண்ட் 16 இல் அடைந்த தோல்வியை மறக்காமல் இல்லை. அந்த தழும்பை ஆற்ற இந்த முறை முன்னேறும் முனைப்பில் உள்ளது.

ஜாம்பியா அணி முதல் முறையாகவும், கோஸ்டாரிகா அணி 2-வது முறையாகவும் களமிறங்குகின்றன.

குரூப் டி பிரிவில் இங்கிலாந்து, ஹைதி, டென்மார்க், சீனா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் இங்கிலாந்தின் வேகம் பாதிக்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக பெத் மீட் மற்றும் லியா வில்லியம்சன் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகள் இல்லாத போதிலும் ஐரோப்பிய சாம்பியனான இந்த அணி மற்ற அணிக்கு சவால் கொடுக்கும்.

குரூப் இ பிரிவில் அமெரிக்கா, வியட்நாம், நெதர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய அணிகளும், குரூப் எஃப் பிரிவில் பிரான்ஸ், ஜமைக்கா, பிரேசில், பனாமா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.

குரூப் ஜி பிரிவில் ஸ்வீடன், தென்னாப்பிரிக்கா, இத்தாலி, அர்ஜென்டினா ஆகிய அணிகளும், குரூப் எச் பிரிவில் ஜெர்மனி, மொராக்கோ, கொலம்பியா, தென் கொரியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி