Womens Hockey World Cup: கனடா அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த இந்தியா மகளிர் அணி அசத்தல் வெற்றி
Nov 30, 2023, 11:40 PM IST
எஃப்ஐஎச் மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் கனடாவுக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்து இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
எஃப்ஐஎச் மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் சிலீ நாட்டிலுள்ள சாண்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சி பிரிவில் பெல்ஜியம், கனடா, முன்னாள் சாம்பியன் ஜெர்மனி ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது இந்தியா.
10வது தொடராக அமைந்திருக்கும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு ப்ரீத்தி தலைமை தாங்குகிறார். இதையடுத்து கனடாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்தியா 12-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்திய வீராங்கனைகளில் அன்னு ஆட்டத்தின் 4, 6, 39வது நிமிடங்களிலும், திபி மோனிகா டோப்போ 21, மும்தாஸ் கான் 26, 41, 54, 60 ஆகிய நிமிடங்களிலும், தீபிகா சோரெங் 34, 50, 54 ஆகிய நிமிடங்களிலும், நீலம் 45வது நிமிடங்களிலும் கோல் அடித்தார்கள்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்