Womens Ashes 2023: அதிரடி காண்பித்து வரும் எல்லீஸ் பெர்ரி-ஆஸி., மகளிர் நிதான ஆட்டம்
Jun 22, 2023, 09:49 PM IST
Womens Ashes: எல்லிஸ் பெர்ரி 82 ரன்களை விளாசினார். டஹிலா மெக்ராத் 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
மகளிர் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
ஆஸ்திரேலிய மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸி., வீராங்கனைகள் பெத் மூனி 33 ரன்களையும் லிட்ச்ஃபீல்டு 23 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
எல்லிஸ் பெர்ரி 82 ரன்களை விளாசினார். டஹிலா மெக்ராத் 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
ஜெஸ் ஜானாசென் களத்தில் உள்ளார். இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் மகளிர் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடவர் ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வரும் 28ம் தேதி 2வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
இது ஒரு ஆஷஸ் தொடர், இது பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய சவால்.
அவர்கள் ரிசல்ட்டை நோக்கி செல்லவில்லை என்றால், தோல்வி குறித்து அவர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். ஆனால், அவர்கள் தோல்வி குறித்து வருத்தமடைவார்கள்.
டெஸ்ட் ஆட்டங்களில் ஜெயிப்பது அத்தனை எளிதானது அல்ல. அதிலும் ஆஷஸ் டெஸ்டில் ஜெயிப்பது அத்தனை எளிதல்ல. கேமை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், தோல்வி அடையத் தேவையிருக்காது.
இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருந்தது. ஆனாலும் ஆஸ்திரேலியா ஜெயித்தது என்றார் ரிக்கி பாண்டிங்.
ஆஸ்திரேலியா தற்போதைய நிலையில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பாட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோரின் முயற்சியால் ஆஸி., முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கியது.
ஆஷஸ் கிரிக்கெட் தொடரில், பிரிமிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி நாள் கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணி புள்ளிக் கணக்கை தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்டில் ஆட்டநாயகனாக உஸ்மான் கவாஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்