Virat Kohli: கோலியை சந்தித்து கட்டியணைத்து முத்தம்! வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா தாயாரின் உணர்ச்சிகரமான தருணம்
Jul 22, 2023, 07:20 PM IST
ஸ்டம்ப் மைக் சாட்டில் பேசியபடி விராட் கோலியின் தீவிர ரசிகையான வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ்வா டா சில்வா தாய், அவரை சந்தித்த உணர்ச்சிகரமான தருணத்தின் விடியோ வெளியாகியுள்ளது.
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விராட் கோலியின் 500வது சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் சதமடித்த கோலி, 121 ரன்களில் அவுட்டானார். அத்துடன் தனது 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையும் புரிந்தார்.
இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஸ்வா டா சில்வா - விராட் கோலி ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகயிருந்த நிலையில் அது வைரலாகவும் செய்தது.
ஆட்டத்தின் முதல் நாளன்று, "எனது தாய் போனில் அழைத்து, விராட் கோலி ஆட்டத்தை பார்க்க வருவதாக கூறினார். இதை என்னால் நம்பமுடியவில்லை" என்று ஜோஷ்வா கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்ததும் வீரர்கள் செல்லும் பேருந்து அருகே வைத்து ஜோஷ்வா டா சில்வா தாயார், கோலியை சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது.
கோலியை பாத்தவுடன் கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்திய ஜோஷ்வா தாய், அவருக்கு பாசத்துடன் முத்தமும் கொடுத்தார். பின்னர் "நீங்கள் சிறந்த மனிதர். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்" என நெகிழ்ச்சியுடன் கூறி மீண்டும் கட்டியணைத்து விடை பெற்றார்.
இதன்பிறகு கண்களின் ஆனந்த கண்ணீர் வடிய ஜோஷ்வா தாயார் கூறியதாவது: "நான் உன்னைப் ஜோஷ்வாவை பார்க்க வரவில்லை. அவரை நான் தினமும் பார்க்கிறேன். விராட் கோலியை பார்க்க மட்டுமே வந்திருக்கிறேன். இப்போதுதான் கோலியை முதன்முறையாக சந்திக்கிறேன். அவர் அழகான அற்புதமான மனிதர். அவரும் எனக்கு மகன் போல் தான்.
விராட் கோலிக்கு அழகான மனைவியும், குழந்தையும் இருக்கிறார்கள். கோலி திறமையான கிரிக்கெட்டர். அவரை போலவே எனது மகனும் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்." என்றார்.
விராட் கோலி - ஜோஷ்வா தாயார் இடையிலான சந்திப்பின் விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தின்போது விக்கெட் கீப்பர் ஜோஷ்வா, ஒரு ரன் ஓட வேண்டிய இடத்தில் இரண்டு ரன்களை ஓடியே கோலியை பார்த்து, "2012 முதல் நீங்கள் இதனை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ரன் சேர்க்க வேண்டிய இடத்தில், 2 ரன்களாக மாற்றிவிடுகிறீர்கள்" என்றார்.
ஜோஷ்வா - கோலி இடையிலான உரையாடலில், "சதத்தை சீக்கிரம் விளாசிவிடுங்கள் என ஜோஷ்வா சொல்ல, நான் மைல்கல்லை எட்டுவதில் என்னைவிட நீங்கள் அதிக ஆர்வமாக இருக்கிறீர்கள் என கோலி பதில் அளித்துள்ளார்.
அத்துடன், நீங்கள் சதம் விளாச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்ற ஜோஷ்வா சொன்னது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது. இதையடுத்து ஜோஷ்வா கூறியதுபோல் கோலி சதமடித்ததுடன், அவரது தாயும் கோலியை சந்தித்த தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்