IND vs WI 1st T20: பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி.. முதல் டி20-இல் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
Aug 03, 2023, 11:55 PM IST
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை தோல்வியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது. 150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது. ஆனால், இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை எடுத்தது.
4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கண்டது. டி20 தொடரை முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸும், தோல்வியுடன் இந்தியாவும் தொடங்கியிருக்கிறது. அடுத்த டி20 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
முன்னதாக, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்தியா, ஆரம்பம் முதலே தடுமாறியது. தேவையே இல்லாமல் கிரீஸை விட்டு இறங்கி ஸ்டம்பிங் ஆனார் கில். வெறும் 3 ரன்னில் நடையைக் கட்டினார்.
ஒரு நாள் தொடரில் தொடர்ந்து அரை சதம் விளாசி அசத்தி வந்த இஷான் கிஷன், முதல் டி20 இல் வெறும் 6 ரன்களில் பெவிலியன் சென்றார்.
சூர்ய குமார் யாதவ் 21 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 19 ரன்களில் நடையைக் கட்டினர். அறிமுகமான முதல் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா, 3 சிக்ஸர்கள், 2 ஃபோர்ஸ் விளாசி ஆச்சரியப்படுத்தினார்.
எனினும், அவை அரை சதம் எடுக்க விடாமல் தடுத்தார் வெஸ்ட் இண்டீஸ் பவுர் ஷெர்ஹெர்டு.
அவரது பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று ஹெட்மயரிடம் கேட்ச் ஆனார்.
அக்சர் படேல் வந்தும் தேவையே இல்லாமல் ரன் அவுட்டாகி சஞ்சு சாம்சனும் நடையைக் கட்டினார். அவர் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சஞ்சு சாம்சன் இருந்திருந்தாலும் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.
கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என இருந்தது. குல்தீப், அக்சர் களத்தில் இருந்தனர். அர்ஷ்தீப் சிங் களம்புகுந்து 2 பவுண்டரிகளை விரட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கடைசி ஓவரில் குல்தீப் கிளீன் போல்டு ஆனதும் நம்பிக்கை போனது. பின்னர், சஹல் களம் புகுந்தார். கடைசி ஓவரில் அர்ஷ்தீப்பும் ஆட்டமிழந்தார். 1 பந்தில் சிக்ஸர் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. தனது அறிமுகப் போட்டியில் களம் புகுந்தார் முகேஷ். 1 ரன் எடுத்தார். 145 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. இவ்வாறாக, வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹோல்டர், ஷெப்ஹெர்டு, மெக்காய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் ஹோசின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
5 டி20 கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து தற்போது இரு அ்ணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
அதன்படி முதல் டி20 இன்று தொடங்கியது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார். திலக் வர்மா, முகேஷ் குமார் ஆகியோர் சர்வதேச டி20இல் அறிமுகமாகினர்.
அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போவெல் 48 ரன்களும், நிகோலஸ் பூரன் 41 ரன்களும் விளாசினர். அர்ஷ்தீப், சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பாண்டியா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
முதலில் கைல் மேயர்ஸ் 1 ரன்னில் நடையைக் கட்டினார். பிராண்டன் கிங் 28 ரன்களிலும், ஜான்சன் சார்லஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயர் 10 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இவ்வாறாக, வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்