IND vs WI 3rd T20 Preview: தேவை கட்டாய வெற்றி.. வெஸ்ட் இண்டீஸின் தொடர் வெற்றிக்கு தடை போடுமா Team India?
Aug 08, 2023, 06:39 AM IST
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே இன்று 3வது டி20 ஆட்டம் நடக்கிறது. இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை 3வது டி20 போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது.
டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 5டி20 கொண்ட தொடரில் இந்திய அணி மே.இ.தீவுகளை எதிர்கொண்டு வருகிறது. முதல் 2 டி20 ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக செயல்பட்டு வாகை சூடியது.
இன்றைய தினம் 3வது டி20 ஆட்டம் கயானாவில் இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் இருக்கிறது.
முதல் 2 டி20 தொடர்களில் வெற்றி கண்ட மே.இ.தீவுகள் அணி, இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் தொடரைக் கைப்பற்றி விடும்.
ரோவ்மேன் போவெல் மே.இ.தீவுகள் அணியை வழிநடத்துகிறார்.
இந்திய அணி அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
முதல் டி20 ஆட்டத்தில் சேஸிங்கில் இந்திய அணி பேட்டிங்கில் கடுமையான சொதப்பியதால் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
திலக் வர்மாவைத் தவிர எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படியாக முதல் டி20 ஆட்டத்தில் விளையாடவில்லை.
2வது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. திலக் வர்மா மட்டுமே அரை சதம் பதிவு செய்தார். சேஸிங்கில் மே.இ.தீவுகள் மிரட்டியதால் அந்த அணிக்கு வெற்றி வசமானது.
சேஸிங்கில் நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அரை சதம் பதிவு செய்து ஆட்டத்தை வெற்றிப் பாதைக்கு செல்ல வித்திட்டார்.
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் சாதகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் ஆட்டம் முன்னேறும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். டாஸ் வெல்லும் கேப்டன்களில் ஒருவர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம்.
இந்தியா-உத்தேச பிளேயிங் லெவன்
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச பிளேயிங் லெவன்
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல்(கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், அகில் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், ஓபெட் மெக்காய்.
டிடி ஸ்போர்ட்ஸ், ஃபேன்கோட் மற்றும் ஜியோசினிமா ஆகிய தளங்களில் இப்போட்டியை நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
டாபிக்ஸ்