தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India 3rd Odi Innings: 4 வீரர்கள் அரை சதம்.. நச்சுன்னு விளையாடிய இந்தியா-இமாலய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்

India 3rd ODI Innings: 4 வீரர்கள் அரை சதம்.. நச்சுன்னு விளையாடிய இந்தியா-இமாலய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்

Manigandan K T HT Tamil

Aug 01, 2023, 11:00 PM IST

google News
டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது. (AFP)
டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.

டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே இன்று 3வது ஒரு நாள் கிரிக்கெட் டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது.

3வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்திலும் இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாக இது அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் 6வது அரை சதம் ஆகும்.

ஷுப்மன் கில் அவருடன் இணைந்து விளையாடி வருகிறார். இருவரும் இணைந்து 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளனர்.

முன்னதாக, முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 பந்துகளில் 52 ரன்களும், இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் 55 பந்துகளில் 55 ரன்களும் விளாசி அசத்தினார் இஷான் கிஷன்.

மறுபக்கம் ஷுப்மன் கில்லும் அரை சதம் விளாசி அசத்தினார்.

முன்னதாக, முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 பந்துகளில் 52 ரன்களும், இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் 55 பந்துகளில் 55 ரன்களும் விளாசி அசத்தினார் இஷான் கிஷன்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. கடந்த 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் டாஸ் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கைத் தேர்வு செய்ததை அடுத்து, இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில், 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிர்ச்சியுடன் வெளியேறினார். ருதுராஜ் கெய்க்வாட் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் 8 ரன்களில் வந்தவேகத்தில் நடையைக் கட்டினார்.

இஷான் கிஷன் 77 ரன்களிலும், சிறப்பாக அதிரடியுடன் விளையாடிய சஞ்சு சாம்சன் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், ஹர்திக்குடன் நின்று விளையாடினார். இருப்பினும், 35 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜடேஜா இறங்கி பாண்டியாவுக்கு தோள் கொடுத்தார்.

49 வது ஓவரில் அரை சதம் விரட்டி அசத்தினார் ஹர்திக் பாண்டியா. இது அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் 10வது அரை சதம் ஆகும்.

சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா (AP Photo/Ramon Espinosa)

இந்த ஆட்டத்தில் கேப்டன்ஷிப்பை ஹர்திக் பாண்டியா வகித்தார். ரோகித், கோலி ஆகியோருக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டது. பாண்டியா 70 ரன்கள் விளாசினார்.

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது. 

352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.

பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆடவர் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். இதற்கு முன்பு மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் நடைபெற்றிருக்கிறது.

2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட், 5 டி20 ஆட்டங்களில் விளையாட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி, இஷான் கிஷன் ஆகியோர் அறிமுகமாகினர். முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் டிரா ஆனது. அதைத் தொடர்ந்து நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவும், 2வது ஒரு நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் ஜெயித்துள்ளன. இதனால் ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டி சுவாரசியத்துடன் நடந்து வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி