IND vs WI 2nd T20: ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமையுமா இந்த சண்டே.. இன்று 2வது டி20-இல் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்
Aug 06, 2023, 06:40 AM IST
Hardik Pandya: இந்திய அணி இந்த தொடரில் சமநிலைக்கு திரும்புவதற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு தயாராகி இருக்கிறது. இன்றிரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 ஆட்டம் நடைபெறவுள்ளது.
முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக விளையாடி, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர்களின் உற்சாகமான பந்துவீச்சுதான் தோல்வியில் இருந்து அபார வெற்றியைப் பெற்று தந்தது. எதிரணி பேட்டிங் ஆர்டரை உடைத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு கடுமையாக உழைத்தது.
இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ரோவ்மன் பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, வரும் ஆட்டங்களில் சொந்த மண்ணில் தனது வெற்றி சாதனையை விரிவுபடுத்தும் முனைப்பில் உள்ளது.
அதேசமயம், இந்திய அணி இந்த தொடரில் சமநிலைக்கு திரும்புவதற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் டி20 இல் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி கட்டாயம் இந்த ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
கயானா மைதானம் எப்படி?
இந்த மைதானத்தில் மேற்பரப்பில் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது இரு அணிகளின் பந்துவீச்சு பிரிவும் தங்கள் ஆட்டத்தின் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டம் தொடர்ந்து முன்னேறும் போது சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டாஸ் வெல்லும் கேப்டன்களில் ஒருவர் முதலில் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Fancode செயலியில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம்.
இந்தியா- உத்தேச பிளேயிங் லெவன்
ஷுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ்-உத்தேச பிளேயிங் லெவன்
கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் போவெல்(கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகில் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், ஓபெட் மெக்காய்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்