தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi: சுழலில் மிரட்டும் அஸ்வின்-ஜடேஜா!-முதல் நாளில் பவுலிங்கில் அசத்தும் இந்தியா

IND vs WI: சுழலில் மிரட்டும் அஸ்வின்-ஜடேஜா!-முதல் நாளில் பவுலிங்கில் அசத்தும் இந்தியா

Manigandan K T HT Tamil

Jul 12, 2023, 11:29 PM IST

google News
Ahswin: அஸ்வின், பிராத்வைட், சந்திரபால் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார். இருவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். (AFP)
Ahswin: அஸ்வின், பிராத்வைட், சந்திரபால் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார். இருவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

Ahswin: அஸ்வின், பிராத்வைட், சந்திரபால் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார். இருவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இன்றிரவு 7.30 மணிக்கு டொமினிக்காவில் இப்போட்டி தொடங்கியது. இப்போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடக்கிறது. இதில் வெற்றி-தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ், உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது.

அஸ்வின், பிராத்வைட், சந்திரபால் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார். இருவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

பின்னர் வந்த ரேமன் ரெய்ஃபர் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஷர்துல் தாக்குர் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது கேட்ச் ஆனார்.

பின்னர், பிளாக்வுட்டை 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஆல்-ரவுண்டர் ஜடேஜா வீழ்த்தினார்.

அதைத்த தொடர்ந்து விக்கெட் கீப்பர் ஜோஷுவா டா சில்வா விக்கெட்டையும் ஜடோஜா கைப்பற்றினார்.

ஜேசன் ஹோல்டர், அலிக் ஆகியோர் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, 47 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை எடுத்துள்ளது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் பிளேயிங் லெவன் வெளியாகியுள்ளது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக டெஸ்டில் களமிறக்கப்படுகின்றனர்.

கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரஹானே, ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்குர், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.

முதல் நாளில் பவுலிங்கிற்கு சாதகமாகவும், அதே நேரத்தில் போட்டியின் 2 மற்றும் 3 வது நாளில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டம் தொடர்ந்து முன்னேறும்போது ஆடுகளத்தின் மேற்பரப்பு மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆட்டத்தின் கடைசி இரண்டு நாட்களில் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கருதப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி