தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Won: இந்தியா வெற்றித் தொடக்கம்.. பார்படாஸில் இஷான் கிஷன் தரமான ஆட்டம்

India Won: இந்தியா வெற்றித் தொடக்கம்.. பார்படாஸில் இஷான் கிஷன் தரமான ஆட்டம்

Manigandan K T HT Tamil

Jul 27, 2023, 11:14 PM IST

google News
Rohit Sharma: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வெற்றியுடன் தொடங்கியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. (AFP)
Rohit Sharma: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வெற்றியுடன் தொடங்கியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

Rohit Sharma: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வெற்றியுடன் தொடங்கியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பார்படாஸில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 114 ரன்களில் சுருண்டது.

இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி கண்டது.

தொடக்க வீரர்களாக களம் புகுந்த இஷான் கிஷன், கில் ஆகியோரே மேட்ச்சை முடித்துவிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், கில் ஸ்லிப்பில் நின்றிருந்த பிராண்டன் கிங்கிடம் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். அப்போது அவர் வெறும் 7 ரன்களே எடுத்திருந்தார்.

பின்னர், வந்த சூர்யகுமார் யாதவ், தனது சிக்னேச்சர் சிக்ஸர் ஒன்றை பறக்க விட்டதுடன், 3 பவுண்டரிகளை விளாசி 19 ரன்கள் எடுத்திருந்தபோது LBW ஆனார். மோதி பந்துவீச்சில் அவர் ஆட்டமிவழந்தார். டிஆர்எஸ் கேட்டுப் பார்த்தபோதிலும், அது விக்கெட் தான் என 3வது நடுவர் உறுதி செய்தார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா, தேவையில்லாமல் பவுலர் லைனில் ரன் அவுட்டானார். அப்போது வெறும் 5 ரன்களே அவர் எடுத்திருந்தார். இந்த நிலையில், இஷான் கிஷன், ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 4வது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

கடைசி வரை நின்று மேட்ச்சை முடிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், மோதி சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். அப்போது அவர் 46 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார்.

அடுத்து கேப்டன் ரோகித் வருவார் என எதிர்பார்த்தால், ஷர்துல் தாக்குர் களமிறங்கினார். ஆனால் அவரோ வந்த வேகத்தில் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர், வந்த ரோகித், ஜடேஜா ஆகியோர் அணியின் ஸ்கோரை மூன்று இலக்கத்துக்கு கொண்டு சென்றனர்.

இவ்வாறாக,  22.5 ஓவர்களில் இந்திய அணி 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

குறைவான இலக்கே என்றாலும் இந்திய அணி மெதுவாக ஆடியது என கூறலாம். எப்போதே முடிக்க வேண்டிய ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஸ்லோவாக எடுத்துச் சென்றது இந்திய அணி என்பது ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர் மோதி (Photo by Randy Brooks / AFP)

2வது ஒரு நாள் கிரிக்கெட் வரும் சனிக்கிழமை ஜூலை 29ம் தேதி இதே பார்படாஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரின் சுழல்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.

ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார், ஷர்துல் ஆகியோரும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் மட்டும் 43 ரன்கள் பதிவு செய்தார்.

மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடவுள்ளது.

அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

முன்னதாக, தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் களமிறங்கினார். மற்றொரு பக்கம் கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினார். 2 ரன்கள் எடுத்திருந்த கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து வந்த அலிக் 22 ரன்கள் எடுத்திருந்தபோது முகேஷ் குமார் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். ஜடேஜா, ஹெட்மயர், போவெல், ஷெப்ஹெர்டு ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கேப்டன் ஷாய் ஹோப், டொமினிக் டிரேக்ஸ், யான்னிக் கரியா, ஜேடன் சீல்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் சுருட்டினார்.

ஷெப்ஹெர்டின் கேட்ச்சை அபாரமாக பிடித்து அசத்தினார் கோலி. ஸ்லிப்பில் நின்றிருந்த அவர், தொட்டு விட்ட பந்தை லாவகமாக பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். அவரை சக வீரர்கள் பாராட்டினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி