Cristiano Ronaldo: கால்பந்து விளையாடில் 850வது கோல்! இமாலய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரெணால்டோ - விடியோ
Sep 03, 2023, 04:46 PM IST
கால்பந்து விளையாட்டில் வேறு எந்த வீரரும் நிகழ்த்திடாத இமாலய சாதனையை புரிந்துள்ளார் போர்ச்சுல் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ. இவரது இந்த சாதனை முறியடிக்க இனி ஒரு வீரர் தான் பிறந்த வரம் வேண்டும் என்கிற ரீதியில் மிகவும் உச்சபட்ச சாதனையாக அமைந்துள்ளது.
உலக அளவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது செளதி அரேபியா கால்பந்து கிளப் அணியான அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது இருப்பு காரணமாக அசைக்க முடியாத அணியாக அல் நசர் திகழ்ந்து வருகிறது.
இதையடுத்து கால்பந்து விளையாட்டில் 850 கோல்கள் அடித்து தனித்துவமான சாதனையை புரிந்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. செளதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல் ஹசர் - அல்ஹசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ரொணால்டோவில் அல் ஹசர் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 68வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் ரொணால்டோ இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் இந்த சீசனில் இரண்டு தொடர் தோல்விகளை பெற்ற அல் நசர் அணி, சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியலிலும் முன்னேறியது.
தனது சாதனை குறித்து சமூக வலைதளபக்கத்தில் பதிவுட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் கிறிஸ்டியானோ ரொணால்டோ, " அணியாக சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இன்னும் மேம்படுவோம். கால்பந்து கேரியரில் 850 கோல்கள், இன்னும் எண்ணிக்கை தொடர்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சீசனில் இதுவரை மொத்த 6 கோல்கள் அடித்துள்ளார் கிறிஸ்டியானோ ரெணால்டோ. அல் நசர் அணியின் வருகைக்கு முன் உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணியில் 9 ஆண்டு காலம் விளையாடியுள்ளார் கிறிஸ்டியானோ ரொணால்டோ. இவர் விளையாடி காலகட்டத்தில் அந்த அணி 5 முறை சாம்பியன்ஸ் லீக் டைட்டிலை வென்றது. ரியல் மாட்ரிட் அணிக்காக 438 போட்டிகளில் விளையாடிய ரொணால்டோ, 450 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டு வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் லிஸ்ட் இதோ
கிறஸ்டியானோ ரொணால்டோ - 850
லியோனல் மெஸ்ஸி - 818
பீலே - 762
ரோமாரியோ - 755
ஃபெரென்க் புஸ்காஸ் - 724
தற்போது கால்பந்து விளையாடு வீரர்களில் லியோனல் மெஸ்ஸி, ரொணால்டோவுக்கு அடுத்தபடியாக 32 கோல்கள் பின் தங்கியுள்ளார். எனவே ரொணால்டோ சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பு அவரிடமே அதிகமாக உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்