தமிழ் செய்திகள்  /  Sports  /  Virat Kohli Century: Kohli Shatters 8 Records, Surpasses Sachin Tendulkar, Ponting, Rohit Sharma

Virat Kohli Century: ஒரே சதம்...பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய கோலி

Sep 09, 2022, 04:45 PM IST

உப்புசப்பில்லாத ஒரு சம்பிரதாய ஆட்டத்தை தனது சதம் மூலம் சாதனை ஆட்டமாக மாற்றியுள்ளார். நீண்ட நாள் காத்திருப்புக்கு தனது பின்னர் சதம் மூலம் ரசிகர்களை மட்டுமல்ல தன்னையும் ஆசுவாசப்படுத்திக்கொண்டார் கோலி. இந்த ஒரு சதம் மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் தகர்த்துள்ளார்.
உப்புசப்பில்லாத ஒரு சம்பிரதாய ஆட்டத்தை தனது சதம் மூலம் சாதனை ஆட்டமாக மாற்றியுள்ளார். நீண்ட நாள் காத்திருப்புக்கு தனது பின்னர் சதம் மூலம் ரசிகர்களை மட்டுமல்ல தன்னையும் ஆசுவாசப்படுத்திக்கொண்டார் கோலி. இந்த ஒரு சதம் மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் தகர்த்துள்ளார்.

உப்புசப்பில்லாத ஒரு சம்பிரதாய ஆட்டத்தை தனது சதம் மூலம் சாதனை ஆட்டமாக மாற்றியுள்ளார். நீண்ட நாள் காத்திருப்புக்கு தனது பின்னர் சதம் மூலம் ரசிகர்களை மட்டுமல்ல தன்னையும் ஆசுவாசப்படுத்திக்கொண்டார் கோலி. இந்த ஒரு சதம் மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் தகர்த்துள்ளார்.

ஆசிய கோப்பை 2022 தொடரை விட்டு இந்தியா, ஆப்கானிஸ்தான் அணி வெளியேறிவிட்ட போதிலும் அட்டவணைப்படி சம்பிரதாய ஆட்டமாக விளையாடினர். உப்புச்சப்பில்லாத இந்த ஆட்டத்தை சாதனை ஆட்டமாக மாற்றியுள்ளார் கோலி.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள், 1020 நாள்களுக்கு பிறகு மூன்ற இலக்க ரன்களை தனது பேட்டின் மூலம் மீண்டும் எடுத்தார் கோலி. இந்தப் போட்டியில் அதிரடி, கிளாஸ், மாஸ் என கலந்து தனது விண்டேஜ் ஸ்டைல் ஆட்டத்தையும் அவர் மீட்டெடுத்திருப்பது கூடுதல் ஸ்பெஷல்.

61 பந்துகளுக்கு 122 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்தித்த கோலி, இந்த காத்திருப்பு சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்த அவர் தவறவில்லை. இந்த சதம் மூலம் கோலி நிகழ்த்தியிருக்கும் சாதனைகளின் விவரங்கள்:

  • இது கோலியில் 71வது சதமாகவும் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதமாக அமைந்தது. இதன் மூலம் இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் சதமடித்த சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் ஆகியருக்கு அடுத்தப்படியாக தனது பெயரை இணைத்துக்கொண்டார்
  • சர்வதேச சதங்களில் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டென்டுல்கள் 100 சதங்களை அடித்து முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 70 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கோலி
  • கோலி 71 சதங்கள் அடிப்பதற்கு டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட் என அவர் 522 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதன் மூலம் மிகக் குறைவான இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார். சச்சின் டென்டுல்கர் இந்த சாதனையை 523வது இன்னிங்ஸில்தான் நிகழ்த்தினார்
  • சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் கோலி. இதில் முதல் இடத்தில் சச்சின் டென்டுல்கரும், இரண்டாவது இடத்தில் ராகுல் டிராவிட்டும் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சச்சின் 543 இன்னிங்ஸில்தான் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆனால் கோலி 522வது இன்னிங்ஸிலேயே 24 ஆயிரம் ரன்கள் கடந்து தான் ஒரு ரன் மெசின் என்பதை நிருபித்துள்ளார்
  • டி20 கிரிக்கெட்டில் 6 சதங்களை அடித்துள்ள கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகும் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். அதே போல் ஆசிய பேட்ஸ்மேன்களின் பாபர் அசாமுடன் இந்த சாதனையில் இணைந்துள்ளார்
  • சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு அடுத்தபடியாக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சதம் அடித்த நான்காவது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் கோலி. அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மேற்கூறியவர்களோடு சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோரை தொடர்ந்து சதமடித்த 6வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்
  • இந்தியாவுக்காக சதமடித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இதில், கோலி 122 ரன்களுடன் முதல் இடத்திலும், ரோஹித் ஷர்மா 118 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார்கள். அதே போல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சதமடித்த வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகவும் கோலி அடித்த 122 ரன்கள் அமைந்துள்ளது
  • ரோஹித்துக்கு அடுத்தபடியாக டி20 கிரிக்கெட்டில் 33 வயதில் 3,500 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெறுகிறார். இதனை தனது 96வது இன்னிங்சில் அவர் நிகழ்த்தியுள்ளார்
  • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 1042 ரன்கள் எடுத்துள்ள இந்திய பேட்ஸ்மேனாக, ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் மொத்த சாதனையில் சனத் ஜெய்சூர்யா, குமாரா சங்ககாரா ஆகியோரை தொடர்ந்து மூன்றாவது இடத்தை அவர் பிடித்துள்ளார்