Japan Open 2023: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்.. சாம்பியன் பட்டம் வென்றார் அக்சல்சென்!
Jul 30, 2023, 06:21 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று (ஜூலை 30) இறுதிச்சுற்று ஆட்டம் நடந்தது. இந்தப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென் மற்றும் இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டி ஆகியோர் மோதினர். இதில் அக்சல்சென் 21-7, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
முன்னதாக, ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி அடைந்தார். இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் நேற்று நடந்த ஆட்டத்தில் அவர் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், இன்று நடந்த ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்