தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Isl: சென்னையின் எஃப்சியை வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி

ISL: சென்னையின் எஃப்சியை வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி

Manigandan K T HT Tamil

Dec 29, 2023, 11:26 AM IST

google News
சென்னையின் எஃப்சியின் பாதுகாப்பு அரணை உடைத்து இவர்கள் கோல் பதிவு செய்தனர். (PTI)
சென்னையின் எஃப்சியின் பாதுகாப்பு அரணை உடைத்து இவர்கள் கோல் பதிவு செய்தனர்.

சென்னையின் எஃப்சியின் பாதுகாப்பு அரணை உடைத்து இவர்கள் கோல் பதிவு செய்தனர்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.

மும்பை புட்பால் அரீனாவில் இப்போட்டி நடந்தது.

லல்லியான்ஜுவாலா 52வது நிமிடத்தில் முதல் கோலை மும்பை அணிக்காக போட்டார். அதைத் தொடர்ந்து இறுதிகட்டத்தில் 80வது நிமிடத்தில் ஒரு கோலை விக்ரமும், 90வது நிமிடத்தில் மற்றொரு கோலை குர்கிரத் சிங்கும் அடுத்தடுத்து போட்டனர்.

சென்னையின் எஃப்சியின் பாதுகாப்பு அரணை உடைத்து இவர்கள் கோல் பதிவு செய்தனர்.

ஒட்டுமொத்தமான செயல்பாட்டின் அடிப்படையில் சென்னையின் எஃப்சியின் நேற்றைய ஆட்டம் திருப்திகரமாக அமையவில்லை.

பந்தை கடத்தும் திறன், பந்தை அதிக நேரம் வைத்திருந்தது, இலக்கை நோக்கி பந்தை கடத்திச் சென்றது, ஷாட்களை அடித்தது என அனைத்திலும் சென்னையின் எஃப்சியைக் காட்டிலும் மும்பை சிட்டி சிறப்பாகவே செயல்பட்டது.

 

அதேபோல், சென்னையின் எஃப்சி அதிக Fouls-ஐ செய்ததது. மஞ்சள் அட்டை எச்சரிக்கையையும் 4 வாங்கியது சென்னையின் எஃப்சி.

போட்டியின் முக்கிய வீரர்

விக்ரம் பர்தாப் சிங் (மும்பை சிட்டி எஃப்சி)

விக்ரம் ஒரு ஆல்-ரவுண்ட் செயல்திறனை வெளிப்படுத்தினார், சிறப்பாக பந்தை கடத்திச் சென்று ஆட்டத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார், பெட்டியின் உள்ளே முக்கிய பாஸ்களை உருவாக்கினார் மற்றும் இறுதியாக பெனால்டி மூலம் ஒரு முக்கியமான ஸ்டிரைக்கைப் பெற்றார். அவர் தனது 31 பாஸ்களில் 24-ஐ நிறைவு செய்தார், இரண்டு கோல்-ஸ்கோரிங் வாய்ப்புகளை உருவாக்கினார், இரண்டு கிராஸ்கள் மற்றும் க்ளியரன்ஸ்கள் செய்து ஒரு அற்புதமான அவுட்டிங்கைத் தடுத்தார்.

மும்பை சிட்டி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி ஆறில் ஜெயித்துள்ளது. புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கேரளா பிளாஸ்டர் 8 வெற்றிகளுடன் முதலிடத்திலும், எஃப்சி கோவா 7 வெற்றிகளுடன் 2வது இடத்திலும் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி