தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ms Dhoni: அம்மாடியோவ்..! இதுதான் ரியல் வெறித்தனம் - தோனியின் பைக் கலெக்‌ஷன்களை கண்டு மிரண்டு போன வெங்கடேஷ் பிரசாத்

MS Dhoni: அம்மாடியோவ்..! இதுதான் ரியல் வெறித்தனம் - தோனியின் பைக் கலெக்‌ஷன்களை கண்டு மிரண்டு போன வெங்கடேஷ் பிரசாத்

Jul 18, 2023, 11:49 AM IST

google News
எம்எஸ் தோனியின் வீட்டில் அவரது பைக் மற்றும் கார் கலெக்‌ஷன்களை பார்த்து பிரமித்துபோயுள்ளனர் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி.
எம்எஸ் தோனியின் வீட்டில் அவரது பைக் மற்றும் கார் கலெக்‌ஷன்களை பார்த்து பிரமித்துபோயுள்ளனர் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி.

எம்எஸ் தோனியின் வீட்டில் அவரது பைக் மற்றும் கார் கலெக்‌ஷன்களை பார்த்து பிரமித்துபோயுள்ளனர் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு பைக், கார்கள் மீது கொள்ளை பிரியம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ரேசர் பைக்குகள், ஆஃப் ரோடு பைக், க்ரூசர் பைக், ஸ்போர்ட்ஸ் வகை என எண்ணற்ற வகைகளை கொண்ட பைக்குகளையும், பலவேறு வெரைட்டியான கார்களை வாங்கியுள்ள தோனி, அதற்காக என பிரத்யேகமாக பெரிய ஷெட் ஒன்றை உருவாக்கி தனது ராஞ்சி வீட்டில் நிறுத்தியுள்ளார் தோனி.

சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிற்கும் தோனியின் பைக் மற்றும் கார் கலெக்‌ஷன்கள் கொண்ட ஷெட்டை வெளி உலகுக்கு காட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி ஆகியோர் தோனியின் ராஞ்சி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவரது பைக், கார் கலெக்‌ஷன்களை பார்த்து பிரமித்துபோயுள்ளனர். பின்னர் இதுதொடர்பான 1.49 விநாடிகள் ஓடும் விடியோவையும் வெங்கடேஷ் பிரசாத் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் தனது டுவிட் பதிவில், "நான் பார்த்ததில் மிகவும் வெறித்தனமான மனிதர் என்றால் அது தோனிதான். சிறந்த சாதனையாளராக மட்டுமில்லாமல் நம்பமுடியாத நபராக உள்ளார்.

அவரது ராஞ்சி வீட்டில் வைத்திருக்கும் பைக் மற்றும் கார்களின் கலெக்‌ஷன்கள். அவரது ஆர்வம் மிரண்டுபோக செய்துள்ளது."

அந்த விடியோவில், தோனியின் மனைவி சாக்‌ஷி, முதல் முறையாக ராஞ்சி வந்தது பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரசாத், "முதல் தடவை இல்லை. நான்காவது தடவையாக வருகிறேன். இந்த இடம் மிகவும் வெறித்தனமாக உள்ளது. ஒருவருக்கு பைத்தியக்காரத்தனம் உச்சத்தில் இருந்தால் மட்டும் இதுபோன்ற பிரமிப்பை ஏற்படுத்த முடியும்.

இதுவொரு பைக் ஷோரூம் போல் உள்ளது. இதை நிஜமாக்குவதற்கு மிகவும் ஆர்வம் மிக்கவரால் மட்டுமே முடியும்" என்றார்.

தோனியன் பைக் கலெக்‌ஷன்களின் ஹார்லி டேவிட்சன், கவாசாகி நிஞ்ஜா எச்2, டுகாட்டி 1098, யமஹா ஆர்டி350, சுஸூகி ஹயாபுசா உள்பட 50க்கும் மேற்பட்ட பைக்குகள் இடம்பிடித்துள்ளன.

2007ஆம் ஆண்டில் முதல் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தவர் வெங்கடேஷ் பிரசாத். இவர் இந்தியாவுக்காக 33 டெஸ்ட், 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 96, ஒரு நாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி