தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Us Open டென்னிஸ் பைனலில் ரோகன் போபண்ணா ஜோடி போராடித் தோல்வி

US Open டென்னிஸ் பைனலில் ரோகன் போபண்ணா ஜோடி போராடித் தோல்வி

Manigandan K T HT Tamil

Sep 09, 2023, 11:11 PM IST

google News
அமெரிக்க ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்று பின்னர் அந்தச் சுற்றிலும் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது. (Getty Images via AFP)
அமெரிக்க ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்று பின்னர் அந்தச் சுற்றிலும் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

அமெரிக்க ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்று பின்னர் அந்தச் சுற்றிலும் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்றில் இந்தியாவின் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எம்டன் ஜோடி 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில்,  ராஜீவ் ராம் (அமெரிக்கா) மற்றும் ஜோ சாலிஸ்பரி (இங்கிலாந்து) ஜோடியிடம் வீழ்ந்தது.

முன்னதாக அரையிறுதியில் பிரான்ஸ் இணையான மஹுத், ஹெர்பெர்ட்டை 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது போபண்ணா இணை.

110 ஆண்டுகளில் எந்த ஆடவர் அணியும் இல்லாத அளவுக்கு ராம் மற்றும் சாலிஸ்பரி ஆதிக்கம் செலுத்தும் யு.எஸ்.ஓபனுக்குத் திரும்பிய பிறகு எல்லாம் மாறியது. யுஎஸ் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ராம்- சாலிஸ்பரி ஜோடி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

"நாங்கள் ஒரு கடினமான நேரத்தை எதிர்கொள்கிறோம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் விம்பிள்டன் முடிந்ததும் நாங்கள் US OPENஐ தொடங்குவதற்கான வேலைகளைத் தொடங்கினோம், "என ராம் கூறினார், “இது நாங்கள் நன்றாக விளையாட முடியும் என்று எங்களுக்குத் தெரியும், அதை முன்பே நிரூபித்தோம், இது தற்செயலாக நடக்கப்போவதில்லை.” என்றார்.

இதுகுறித்து சாலிஸ்பரி கூறுகையில், “இங்கே இருப்பது, அதை மீண்டும் செய்திருக்கிறோம். நாங்கள் சில போராட்டங்களை சந்தித்தோம், சில மோசமான நேரத்தைக் கொண்டிருந்தோம். ஆனால் அதை தாண்டி சாதித்துள்ளோம்” என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி