Ultimate Kho Kho: ‘விழுந்ததும் எழுவோம்’: அல்டிமேட் கோ கோவில் சென்னை மீண்டும் வெற்றி!
Jan 07, 2024, 11:22 AM IST
Chennai Quick Guns: சென்னை குயிக் கன்ஸ் அணி வெற்றி நடை போட்டுவந்தது. தெலுங்கு யோத்தாஸுக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டும் தோல்வி அடைந்தது.
அல்டிமேட் கோ கோ போட்டியில் சென்னை குயிக் கன்ஸ் அணி முந்தைய ஆட்டத்தில் தோற்றிருந்தாலும், அடுத்த ஆட்டத்தில் மும்பை கிலாடிஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த 24வது கோ கோ ஆட்டத்தில் 41-18 என்ற பாயிண்ட் கணக்கில் மும்பையை வீழ்த்தியது சென்னை.
23வது ஆட்டத்தில் குஜராத்-ஒடிஸா அணிகள் மோதின. இதில் 30-27 என்ற கணக்கில் ஒடிஸா ஜெயித்தது.
இன்றைய ஆட்டத்தில் மும்பை-ராஜஸ்தான் அணிகளும், மற்றொரு ஆட்டத்தில் ஒடிஸாவும் தெலுங்கு யோத்தாஸும் மோதுகின்றன.
இந்தப் போட்டிகள் ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி முதல் அல்டிமேட் கோ கோ சீசன் 2 போட்டிகள் நடந்து வருகின்றன. ஜனவரி 13ம் தேதி பைனல் நடைபெறவுள்ளது.
அல்டிமேட் கோ கோ, இந்தியாவின் முதல் தொழில்முறை Kho Kho லீக் ஆகும். அமித் பர்மன் அவர்களால் இந்திய Kho Kho Federation of India (KKFI) உடன் இணைந்து இந்த லீக் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டான கோ கோவை ஒரு தொழில்முறை கட்டமைப்பிற்குள் சந்தைப்படுத்துதல் மற்றும் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த லீக் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியானது இந்தியாவின் சொந்த உள்நாட்டு விளையாட்டை முன்னணிக்கு கொண்டு வருவதையும், இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு லீக்காக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்டிமேட் கோ கோ லீக் பழமையான இந்திய விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், இளம் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை இந்தியா மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தவும் பாடுபடுகிறது.
கார்ப்பரேட் மற்றும் பொழுதுபோக்கு உலகின் மிகப் பெரிய பெயர்கள் சில உரிமையாளர்களின் ஆதரவுடன், அல்டிமேட் கோ கோவின் தொடக்க சீசனில் சென்னை குயிக் கன்ஸ் (KLO ஸ்போர்ட்ஸ்), குஜராத் ஜெயண்ட்ஸ் (அதானி ஸ்போர்ட்ஸ்லைன்), மும்பை கிலாடிஸ் (பாட்ஷா), புனித் பாலன் & ஜான்ஹவி தரிவால் பாலன்), ஒடிசா ஜக்கர்நாட்ஸ் (ஒடிசா விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஊக்குவிப்பு நிறுவனம்), ராஜஸ்தான் வாரியர்ஸ் (கேப்ரி குளோபல்) மற்றும் தெலுங்கு யோதாஸ் (ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ்) ஆகிய அணிகள் அல்டிமேட் கோ கோ பட்டத்திற்காக போராடுகின்றன. வீரர்கள் தங்கள் தலைசிறந்த ஆட்டத்தால் ரசிகர்களை கவரவும், தேசிய நட்சத்திரங்களாக மாறவும் இது வாழ்நாள் வாய்ப்பாக இருக்கும்.
டாபிக்ஸ்