Suicide: மரம் வெட்டும் எந்திரத்தை வைத்து பாகிஸ்தான் இளம் விளையாட்டு வீரர் தற்கொலை
Jun 30, 2023, 04:30 PM IST
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த புகழ் பெற்ற இளம் ஸ்னூக்கர் விளையாட்டு வீரரான மஜித் அலி தற்கொலை செய்துள்ளார். இவருக்கு வயது 28.
பாகிஸ்தான் நாட்டின் பிரபலமான ஸ்னூக்கர் வீரராகவும், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவருமான மஜித் அலி, தனது சொந்த ஊரான சாமுந்திரியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமீப காலமாக மஜித் அலி கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட அவர், மரம் வெட்டும் எந்திரத்தை வைத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் ஸ்னூக்கர் அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருக்கும் இவர், தேசிய அளவிலான புள்ளிப்பட்டியலில் டாப் வீரராக இருந்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஒரு மாத இடைவெளியில் உயிரிழந்த இரண்டாவது ஸ்னூக்கர் வீரராக உள்ளார் மஜித் அலி. கடந்த மாதத்தில் மற்றொரு புகழ் பெற்ற சர்வதேச ஸ்னூக்கர் வீரரான முகமது பிலால் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே மஜித் அலி சகோதரரான உமர், அவரது இறப்பு குறித்து கூறும்போது, " மஜித் தனது டீன் ஏஜ் வயதில் இருந்த மனஅழுத்தம் பாதிப்பில் இருந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு மீண்டும் மனஅழுத்தம் ஏற்பட்டு தவித்து வந்தார். ஆனால் அதற்காக அவர் தனது உயிரை விடுவார் என நாங்கள் நினைத்து பார்க்கவில்லை" என்றார்.
பக்ரீத் பண்டிகையின் முதல் நாளில் மஜித் அலி உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறப்புக்கு பாகிஸ்தான் நாட்டு ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் விளையாட்டு தலைவர் ஆலம்கிர் ஷேக் இரங்கலை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் ஸ்னூக்கர் விளையாட்டுக்கு தனி மவுசு உள்ளது. பாகிஸ்தானுக்காக ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்கள் முகமது யூசுப், முகமது ஆசிப் ஆகியோர் உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்கள்.
இளைஞர்களை கவரும் போட்டியாக அங்கு ஸ்னூக்கர் விளையாட்டு இருந்து வருவதுடன் பல இளம் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு எதிர்கால ஸ்னூக்கர் வீரர்களாக உருவாகி கொண்டிருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்