தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Bcci: பார்படாஸ் செல்வதில் இந்திய வீரர்களுக்கு காலதாமதம் ஆனதாக புகார்!

BCCI: பார்படாஸ் செல்வதில் இந்திய வீரர்களுக்கு காலதாமதம் ஆனதாக புகார்!

Manigandan K T HT Tamil

Jul 26, 2023, 04:36 PM IST

google News
8:40 மணிக்கு ஹோட்டலில் இருந்து, விமான நிலையத்திற்கு சென்ற அவர்கள், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (AP)
8:40 மணிக்கு ஹோட்டலில் இருந்து, விமான நிலையத்திற்கு சென்ற அவர்கள், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8:40 மணிக்கு ஹோட்டலில் இருந்து, விமான நிலையத்திற்கு சென்ற அவர்கள், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கு முன்னதாக டிரினிடாட்டில் இருந்து பார்படாஸுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் தாமதமானது.

இதனால் தூக்கமின்மை பிரச்சனையை வீரர்கள் எதிர்கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த விஷயத்தை பிசிசிஐக்கும் வீரர்கள் தெரியப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடியது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் மழை காரணமாக டிரா ஆனது. இந்நிலையில், நாளை முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி உள்ளிட்டோர் இரவு 11 மணிக்கு டிரினிடாட்டில் இருந்து புறப்பட்டு முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானத்தை அதிகாலையில் சென்றடைய வேண்டும்.

ஆனால், விமானம் தாமதமாக அதிகாலை 3 மணியளவில் புறப்பட்டது. இது நமது வீரர்களை எரிச்சலடைய செய்தது என கூறப்படுகிறது.

இரவு, 8:40 மணிக்கு ஹோட்டலில் இருந்து, விமான நிலையத்திற்கு சென்ற அவர்கள், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

வீரர்கள் ஆட்டத்திற்குப் பிறகு சிறிது ஓய்வு பெற விரும்புவதால், இரவு நேர விமானங்களுக்கு பதிலாக காலை விமானத்தை முன்பதிவு செய்யுமாறு அணி நிர்வாகத்திடம் கோரியுள்ளது. இதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்து, அடுத்த அட்டவணையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தாமதமான விமானம் மற்றும் பரபரப்பான பயண அட்டவணை காரணமாக டெஸ்ட் அணியின் உறுப்பினர்கள் பார்படோஸில் பயிற்சியைத் தவிர்க்க முடிவு செய்தனர்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனத்கட், அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், சுழற்பந்து வீச்சாளர்கள் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோர் மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்காக சில நாட்களுக்கு முன்பே பார்படாஸ் சென்றிருந்தனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி