தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Martina Hingis: சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்ற மார்டினா ஹிங்கிஸ் பிறந்த நாள் இன்று

HBD Martina Hingis: சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்ற மார்டினா ஹிங்கிஸ் பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil

Sep 30, 2023, 06:10 AM IST

google News
2015-ஆம் ஆண்டில், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளிலும், 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்தியாவின் சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்றார். (REUTERS)
2015-ஆம் ஆண்டில், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளிலும், 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்தியாவின் சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

2015-ஆம் ஆண்டில், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளிலும், 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்தியாவின் சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

சுவிட்சர்லாந்து முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸின் பிறந்த தினம் இன்று.

மத்திய ஐரோப்பாவில் உள்ள செக்கோஸ்லோவியாவில் கடந்த 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி பிறந்தார் மார்டினா ஹிங்கிஸ். தாய், தந்தை இருவருமே டென்னிஸ் விளையாடுபவர்கள் என்பதால், குழந்தைப் பருவத்திலேயே டென்னிஸ் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

அவரை உலகம் போற்றும் டென்னிஸ் வீராங்கனையாக்க வேண்டும் என்று அவரது தாயாரும் கனா கண்டார். இவர் 6 வயதை எட்டும்போது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். அதைத் தொடர்ந்து தாயாருடன் 7 வயதில் சுவிட்சர்லாந்துக்கு இடம் மாற்றலானார்.

கடந்த 1993-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஃப்ரெஞ்ச் ஓபன் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தினார்.

அந்த நேரத்தில் அவருக்கு வயது 12 தான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், 1994-ஆம் ஆண்டில் தனது 14 வயதில் மதிப்புமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று மீண்டும் சாதனை படைத்தார் மார்டினா.

ஆஸ்திரேலிய ஓபனில் 16 வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

இதன்படி, 20ம் நூற்றாண்டில் மிக இளம் வயதில் ஒற்றையர் மகளிர் பிரிவில் கிராண்டஸ்லாம் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

ஆஸ்திரேலியா ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட தொடரில் கடந்த 1998-ஆம் ஆண்டில் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

ஓய்வை அறிவித்த பிறகும் டென்னிஸ் மீதான காதலால் மீண்டும் 2005-ஆம் ஆண்டில் டென்னிஸ் உலகுக்குள் நுழைந்தார். சில தோல்விகளைச் சந்தித்தாலும் வெற்றிகளை மீண்டும் பெற்றார்.

இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியுடன் கூட்டணி அமைத்து கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் வெற்றியைப் பதிவு செய்தார் மார்டினா.

2015-ஆம் ஆண்டில், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளிலும், 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்தியாவின் சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்ததுடன், ஒற்றையர் பிரிவில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 13, கலப்பு இரட்டையர் பிரிவில் 7 என மொத்தம் 25 கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர் இவர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி