தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Pv Sindhu: தங்க மங்கை பி.வி.சிந்து பிறந்த நாள் இன்று!

HBD PV Sindhu: தங்க மங்கை பி.வி.சிந்து பிறந்த நாள் இன்று!

Jul 05, 2023, 06:40 AM IST

google News
சிந்து தான் யாரைப்பார்த்து பேட்மிட்டன் துறையில் ஈடுபட்டரோ அவரது பயிற்சி கூடத்திலேயே இணையும் வாய்ப்பு அமைந்தது. ஆம் கோபி சந்தின் பயிற்சி கூடத்தில் இணைந்தார் சிந்து. (Sunil Khandare)
சிந்து தான் யாரைப்பார்த்து பேட்மிட்டன் துறையில் ஈடுபட்டரோ அவரது பயிற்சி கூடத்திலேயே இணையும் வாய்ப்பு அமைந்தது. ஆம் கோபி சந்தின் பயிற்சி கூடத்தில் இணைந்தார் சிந்து.

சிந்து தான் யாரைப்பார்த்து பேட்மிட்டன் துறையில் ஈடுபட்டரோ அவரது பயிற்சி கூடத்திலேயே இணையும் வாய்ப்பு அமைந்தது. ஆம் கோபி சந்தின் பயிற்சி கூடத்தில் இணைந்தார் சிந்து.

ஒலிம்பிக் போட்டி இறுதி சுற்றில் பங்கேற்ற முதல் இந்தியர், காமென் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை என்று பல திருப்புமுனைகளில் தடம் பதித்த இந்தியாவின் தங்க மங்கை பி.வி.சிந்து பிறந்த தினம் இன்று. இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை திரும்பி பார்ப்போம்.

பிறப்பு

பி.வி.ரமணா மற்றும் பி. விஜயா தம்பதிக்கு மகளாக கடந்த 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பிறந்தார் பி.வி.சிந்து. இவரது பெற்றோர் இருவரும் வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். இவரது தந்தை பி.வி.ரமணா வாலிபால் போட்டியில் சிறந்து விளங்கியதால் அர்சுனா விருது பெற்றார்.

பி.வி.சிந்து

உலக கோப்பை கிரிக்கெட்டை மொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்ப்பது எதார்த்தமானது. ஆனால் மொத்த இந்தியாவையும் நாற்காலியின் முனையில் அமர வைத்து பேட்மிட்டன் போட்டியை பார்க்க வைத்தவர் பி.வி சிந்து. அவர் தன் 6ம் வயதிலேயே கோபிசந்தின் பேட்மிட்டன் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு பேட்மிட்டன் பக்கம் திரும்பினார் சிந்து. அவரது ஆர்வத்தை கண்டு கொண்ட தந்தை பேட் மிட்டன் பயிற்சியாளர் மெகபூ அலியிடம் பயிற்சிக்காக அனுப்பினார். ஆனால் அங்கு சிந்து மிகவும் குட்டி என்பதால் அவருடன் விளையாட சரியான ஆட்கள் இல்லாத நிலையில் சுவற்றில் கார்க் அடிக்க வைத்து பயிற்சியை கொடுத்தார் கெமபூ அலி.

இப்படி ஆரம்பித்த சிந்துவின் பேட்மிட்டன் கனவு பள்ளி நாட்களில் அவருக்கு பல கோப்பைகளை வென்று வர ஊக்கம் அளித்தது.

இதையடுத்து சிந்து தான் யாரைப்பார்த்து பேட்மிட்டன் துறையில் ஈடுபட்டரோ அவரது பயிற்சி கூடத்திலேயே இணையும் வாய்ப்பு அமைந்தது. ஆம் கோபி சந்தின் பயிற்சி கூடத்தில் இணைந்தார் சிந்து.

இதையடுத்து 2009ல் நடந்த சர்வதேச பேட் மிட்டன் போட்டிகளில் தடம் பதிக்க தொடங்கிய சிந்து முதல் போட்டியிலேயே வெங்கல பதக்கம் வென்றார். 2012ம் ஆண்டு சீனா ஓபன் பேட்மிட்டன் போட்டியில் லீசுரோவை தோற்கடித்தார்

ரியோ ஒலிம்பிக்ஸ்

2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் விளையாட்டில் பங்கு பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றார் சிந்து. இதன் மூலம் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இறுதி சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டி சென்றார். மேலும் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

இதையடுத்து பல போட்டிகளில் தோல்வியையும் ஆங்காங்கே சிறிய சிறிய வெற்றிகளையும் பெற்று வந்தார் சிந்து

இந்த நிலையில் தான் கடந்த 2022ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் சிந்து.

இப்படி தன் லட்சிய பாதை பல்வேறு தோல்விகளை எதிர்கொண்ட போதும் துவண்டு விடாமல் தன் இலக்கை எட்டும் உத்வேகத்தோடு தொடர்ந்து போராடி வெற்றிகளை குவித்து வருகிறார். அத்தோடு இல்லாமல் இன்று ஏராளமான பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை பேட்மிட்டன் போன்ற விளையாட்டில் சேர்வதை ஊக்கு விக்க சிந்துவின் வெற்றி ஒரு காரணம் என்றால் மிகையல்ல. இந்நிலையில் இன்று சிந்து தனது 28ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நாளில் அவர் குறித்த தகவல்களை பகிந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி