தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Real Madrid: மைனர் சிறுமியுடன் உறவு..! விடியோவை பரப்பிய ரியல் மாட்ரிட் வீரர்கள் 3 பேர் கைது

Real Madrid: மைனர் சிறுமியுடன் உறவு..! விடியோவை பரப்பிய ரியல் மாட்ரிட் வீரர்கள் 3 பேர் கைது

Sep 15, 2023, 07:48 AM IST

google News
மைனர் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட விடியோ வெளியான விவகாரம் தொடர்பாக ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைனர் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட விடியோ வெளியான விவகாரம் தொடர்பாக ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மைனர் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட விடியோ வெளியான விவகாரம் தொடர்பாக ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலக அளவில் புகழ் பெற்ற கால்பந்து லீக் அணியாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் உள்ளது. இந்த அணியை சேர்ந்த மூன்று இளம் வீரர்கள், மைனர் பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துள்ளனர். இவர்கள் இதை விடியோவாக பதிவு செய்து பரப்பியதாக ஸ்பெயின் நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற மகளிர் ஸ்பெயின் அணியை சேர்ந்த வீராங்கனைகளை பாராட்டிய போது பார்வேர்டு வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை கட்டிப்பிடித்து, உதட்டில் லிப்லாக் செய்து சர்ச்சையில் சிக்கினார் அந்நாட்டு கால்பந்து சங்கத்தலைவர் லூயிஸ் ருபியாலெஸ்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பாலியல் விவகாரத்தில் ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் வீரர்கள் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ரியல் மாட்ரிட் அணி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது யாரும் பதில் அளிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 6ஆம் தேதி பாதிப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் யூத் அகாடமி, ரிசர்வ் அணி, மூன்றாவது அணி ஆகிய அணிகளில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில், 16 வயது பெண்ணுடன் உறவு வைத்த வீரர் ஒருவர் அதை விடியோவாக பதிவு செய்ததாகவும், மற்ற இருவர் அந்த விடியோவை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஸ்பானிய குற்றவியல் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி